புதிய சர்ச்சை: மன்னிப்புக் கோரிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் நடைபெற்றதை அடுத்து நேற்று இருவரும் திருப்பதி சென்றனர்.புதிய சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
புதிய சர்ச்சை: மன்னிப்புக் கோரிய விக்னேஷ் சிவன்
Published on

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் நேற்று கலந்து கொண்டனர்.

 அப்போது, திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர். அதில், "புகைப்படம் எடுக்கும் போது காலணியுடன் இருந்ததை கவனிக்கவில்லை. அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com