search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக திருப்பதிக்கு மேலும் ஒரு ரெயில் இயக்கம்
    X

    கோப்பு படம்.

    திருப்பூர் வழியாக திருப்பதிக்கு மேலும் ஒரு ரெயில் இயக்கம்

    • கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

    திருப்பூர்:

    கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில், கொங்கு மண்டலத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பேருதவியாக வுள்ளது.இதனால் எப்போதுமே இந்த ெரயிலில் இடம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். இந்த ெரயிலின் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இரு முறை ெரயில் புதிதாக இயக்கப்படவுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ெரயிலை இயக்குவதற்கு, ெரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த ரெயில் கொல்லத்தில் மதியம் புறப்பட்டு மாலை 6மணிக்கு கோவை வழியாக கடந்து செல்கிறது.கோவையில் இந்த ெரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு திருப்பதி சென்று விடலாம். மறு மார்க்கத்தில் திருப்பதியிலிருந்து இந்த ெரயில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புறப்பட்டு கோவையை கடந்து கேரளம் செல்லும். திருப்பதியில் மதியம் 2:40 மணிக்கு இந்த ெரயில் புறப்படும். கோவைக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.

    கேரளத்தில் கொல்லத்தில் புறப்படும் இந்த ெரயில், மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயம்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களிலும் , தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும். ஆந்திர மாநிலம் சித்தூரில் நிற்கும்.

    இந்த ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது என்பது, பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

    இதில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென்பது கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×