என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "selling drugs"
- போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
- 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 முதல் 30 வயது வரையிலான 3 வாலிபர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாநகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், பாறைக்குழி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அதனை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த மயில்சாமி (வயது 55), அவரது மகன் சதீஷ் குமார்(30) மற்றும் முகமது இக்பால் (25), சூர்ய நாராயணன் (23), சூர்ய பிரகாஷ்(25) மற்றும் சிவக்குமார் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சடையம் பாளையம் பிரிவு, முத்தம்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த முத்து மகன் சரத்குமார் (வயது 27), ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தை சேர்ந்த அழகு துரை மகன் பிரசாந்த் (30) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,300 மதிப்புள்ள ஹான்ஸ், கூலி போன்ற போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு:
தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ஒருவர் கையில் கட்டை பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (49) என்பது தெரிய வந்தது.
அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது.
மொத்தம் ஒரு கிலோ 919 கிராம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.
இதேப்போல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆசனூர் அரேப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் ஒரு நபர் கையில் பச்சை கலர் கட்டை பையுடன் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்தார்.
போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கோவை மாவட்டம் மோப்பெரிபாளையம், தோட்ட சாலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர மணியம் (46) என்பது தெரியவந்தது.
அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ், புகை யிலை பொருட்கள் பான் மசாலா இருப்பது தெரிய வந்தது.
மொத்தம் ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர்.
- கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
- இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.
ஈரோடு:
அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர்.
அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 7 கிலோ எடையில் உள்ள 714 பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன்(34) கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பெரிய வந்தது.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 7 கிலோ எடையுள்ள 714 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.9,000 ஆகும்.
- ஆன்லைன் மூலம் வாங்கினார்
- 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைனபா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தெலுங்குபாளையம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ரோகித் (வயது 24) என்பது தெரிய வந்தது.
மேலும் போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையான இவர் ஆன்லைன் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதைக்காக பயன்படுத்தியதும், மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமைவாக உள்ள விஜயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-கோவையில் தற்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை ஊசி செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. யாரும் இதனை கண்டுபிடிக்க முடியாது போதை கிடைக்கும் என்பதால் இதனை மாணவர்கள், இளைஞர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஊசி செலுத்திய மாணவர் இறந்தார். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மருந்து கடடைகளில் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது. ஆனால் தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஆன்லைனில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய கூடாது என அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
- மூட்டையில் போதை பொருட்கள், புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கங்காணியூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 35) மளிகை கடை நடத்தி வருகிறார் .இவர் தனது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் கடைக்கு சென்று சோதனை செய்ததில் கடையில் ஒரு மூட்டையில் போதை பொருட்கள், புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தார்.
ஆன்-லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் எஸ்.வர்ஷா ஆஜராகி, ‘ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய என் கட்சிக்காரர் நிறுவனம் முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்றுள்ளது. இந்த ஐகோர்ட்டு ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளதால், நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை. சட்டவிரோதமாக, உரிமம் எதுவும் பெறாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
அதேபோல, ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சில மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்கத்தில் மருந்து வினியோகஸ்தர்கள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது நாட்டில் ‘ஆன்-லைன்’ மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதுவரை, வீட்டு உபயோகப் பொருட்களை தான் ‘ஆன்-லைனில்’ பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. இப்போது, சில தனியார் நிறுவனங்கள், மருந்து மாத்திரைகளையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. இதை அனுமதித்தால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.
ஏனென்றால், போலியான, காலாவதியான, கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மருந்துகளை அந்த நிறுவனம், பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், விதிகள் மற்றும் மருந்துக்கடைச் சட்டப்படி இதுபோல மருந்துகளை ‘ஆன்-லைன்’ மூலம் விற்பனை செய்ய முடியாது.
இந்த விற்பனை முறையினால், லட்சக்கணக்கான மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்கள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன.
அந்த நிறுவனங்கள், இந்திய சட்டவிதிகளை பின்பற்றுவது இல்லை. மருந்துகளை விற்பனை செய்ய சட்டப்படியாக உரிமமும் பெறவில்லை. எனவே, ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் இரு மனுக்களையும் அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மருந்துகளை விற்பனை செய்யும் இணையதளத்தை முடக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின்னர், நாடு முழுவதும் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகளை விற்பனை செய்ய வருகிற 9-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம், கீரனூர், கொல்லுமாங்குடி, கோவில்திருமாளம், இஞ்சிக்குடி உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அப்பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு உள்ள பெட்டி கடைகளில் போலீசார் சோதனையிட்டனர். இதில் கீரனூரை சேர்ந்த கார்த்தி (வயது32), கொல்லுமாங்குடியை சேர்ந்த காதர் (27), கோவில்திருமாளத்தை சேர்ந்த சசிகுமார் (45), இஞ்சிக்குடியை சேர்ந்த சம்பந்தம் (70) ஆகியோர் தங்களுடைய கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, காதர், சசிகுமார், சம்பந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்