போதை பொருள் விற்ற வாலிபர்கள் கைது

போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பொருள் விற்ற வாலிபர்கள் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சடையம் பாளையம் பிரிவு, முத்தம்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த முத்து மகன் சரத்குமார் (வயது 27), ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தை சேர்ந்த அழகு துரை மகன் பிரசாந்த் (30) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,300 மதிப்புள்ள ஹான்ஸ், கூலி போன்ற போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com