என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடை"
- இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
- ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைகால கூட்டத் தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், ஸ்டிரைக் அல்லது எந்த மத விழாவையும் நடத்தும் நோக்கத்திற்காக பயன்படுத்தகூடாது. இதற்கு ஒத்துழைக்க உறுப்பினர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடக்கும்போது பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப அமளியில் ஈடுபட்டதால் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதையடுத்து, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக சாலக் குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் செந்நிறத்தில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் சோலையாறு அணை அருகே உள்ள மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள்.
தற்போது அங்கு தீவிரமாக மழை பெய்து வருவதால், நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் சாலையின் ஓரத்தில் நின்று நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கனமழை காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். வால்பாறை வழியாக செல்வதை தடுக்க மளுக்கப்பாறை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தடையை மீறி சென்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.
இதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் தடையை மீறி படகு சவாரி தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் படகு சவாரிக்கு 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றபோது 2 படகுகள் ஒன்றோடொன்று மோதின.
இதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்ததில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி பலியானார். இதுகுறித்து திருப்பாலைவனம போலீசார் வழக்குப்பதிவு செய்து பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், நடுவூர் மாதாகுப்பத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஒ. நந்தகுமார் கூறியதாவது:-
பழவேற்காட்டில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் தடையை மீறி படகு சவாரி செய்தால் படகு ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களது படகு பறிமுதல் செய்யபடும். அங்கு ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். படகு சவாரியை தடுக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சனி, ஞாயிறு இதுகுறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்பட்டதால் அவர்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு உரிமைக்காக ஆயுதம் ஏந்தும் போராட்டம் தொடங்கியது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது.
சிங்கள ராணுவத்தினரை குறி வைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அந்த இயக்கத்தில் இருந்த இளைஞர்கள் சுதந்திர தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக தங்களது உயிரையும் மாய்த்து கொண்டனர். அந்த வகையில் 18 ஆயிரத்து 742 பேர் மாவீரர்களாக மாறி உள்ளனர்.
ஆனால் 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது. 1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை இருந்து வருகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. இந்தியா போன்று அமெரிக்கா, மலேசியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்பட 32 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதித்து உள்ளது.
இதற்கிடையே கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலுமாக இலங்கை ராணுவம் தோற்கடித்தது. அதன் பிறகு விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் முடங்கின. தற்போது விடுதலைப்புலிகள் பெயரில் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை.
இதையடுத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டிப்பு செய்து இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க முயற்சிகள் நடக்கிறது. அதன் ஆதரவு இயக்கங்களுடன் சேர்ந்து இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. எனவே விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சட்ட விரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் தற்போது ஆயுதம் ஏந்துவதை கைவிட்டு இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது.
கனடாவிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தியாவில் முன் எச்சரிக்கை காரணமாக விடுதலைப்புலிகளின் மீதான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
செய்யாறு:
செய்யாறு அடுத்த தண்டரை மேட்டுக்காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கபட்டு வந்தன.
கோடை வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் அப்பகுதிக்கு குடிநீர் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்படவில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செய்யாறு-ஆரணி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு தாசில்தார் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அபோது பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக தூர் வார வேண்டும், மேலும் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்று கூறினர்.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் குடிநீர் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்ற அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாபட்டு வடுகம்முத்தம்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை.இது குறித்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலங்காயம் திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டார வளர்ச்சி பொறியாளர் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம், குரிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
ஒடுகத்தூர் அருகே உள்ள அகரம் ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் ஒடுகத்தூர்-மாதனூர் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ‘விசா’ காலம் முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டிரம்ப் அதிபரான பிறகு கட்டாயமாக கடை பிடிக்கப்படுகிறது.
அந்த பட்டியலில் கினியா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, சியாரா, லியோக், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் உள்ளன. தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானும், கானாவும் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் ‘விசா’ காலத்துக்கும் அதிகமாக அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திரும்ப அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் தங்களது குடிமக்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
எனவே பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா வருவதற்கான ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அது வழக்கம்போல் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை பாகிஸ்தானியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று தங்களது குடிமக்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்க சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
‘விசா’ காலம் முடிந்து அமெரிக்காவில் தங்கி இருக்கும் தனது குடிமக்களை சில ஆண்டுகளாக தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. #USVisa
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக 75க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் நேற்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று காலை வரை அவர்களுக்கு மின் சப்ளை வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் மின் விசிறியை இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.
இந்த நிலையில் மின்தடையை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை எண்ணூர் விரைவுச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
காசிமேடு மின்பிடி துறைமுக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான எல்லைத்தாண்டிய வர்த்தகம், தற்போது பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த வர்த்தகமானது, வாரத்துக்கு 4 நாள்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீரை அரசியல் நலனுக்காக பாஜக பலிகடா ஆக்குவதாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். வாஜ்பாய் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அமைதி முயற்சியையும் தற்போதைய மத்திய அரசு நிராகரிக்கிறது என தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். #CrossBorderTrade #Kashmir
சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.
ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019 #ManekaGandhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்