என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைபொருட்கள் விற்பனை"

    • மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
    • மூட்டையில் போதை பொருட்கள், புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கங்காணியூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 35) மளிகை கடை நடத்தி வருகிறார் .இவர் தனது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் கடைக்கு சென்று சோதனை செய்ததில் கடையில் ஒரு மூட்டையில் போதை பொருட்கள், புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தார்.

    ×