போதை பொருட்கள் பதுக்கி விற்ற வாலிபர் கைது

கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்ததில் அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.
போதை பொருட்கள் பதுக்கி விற்ற வாலிபர் கைது
Published on

ஈரோடு:

அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்தியூர்-பிரம்மதேசம் பிரிவில் உள்ள கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர்.

அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் கட்டு கட்டாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 7 கிலோ எடையில் உள்ள 714 பாக்கெட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன்(34) கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பெரிய வந்தது.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சனீஸ்வரனை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 7 கிலோ எடையுள்ள 714 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.9,000 ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com