என் மலர்

  நீங்கள் தேடியது "Air Pollution"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும்.
  • சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டில்தான் செலவிடுகிறோம். கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டிற்குள் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. நோய்த்தொற்றுகளின் தாக்கத்தால் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு முன்பை விட அதிக அக்கறை செலுத்துகிறார்கள். அழுக்குகள், தூசுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள், மாசு விளைவிக்கும் வாயுக்கள், நுண் துகள்கள், ஒவ்வாமை போன்றவை மூலம் காற்று மாசுபாடு ஏற்படக்கூடும். குளியல் அறை, சமையல் அறைகளில் இருந்து வெளிப்படும் வாசமும் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் இத்தகைய மாசுக்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுக்களை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.

  1. துப்புரவு பொருட்கள்: சமையலறை, குளியலறை, ஜன்னல்கள், தரைத்தளங்கள் போன்றவற்றில் காணப்படும் மாசுக்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் துப்புரவு பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மூலம் கூட மீண்டும் மாசுக்கள் உருவாகக்கூடும். எனவே இயற்கையான துப்புரவு பொருட்களை பயன்படுத்துவது, மாசுபாட்டுக்கு வழிவகுக்காத பொருட்களை உபயோகிப்பது என மாற்று வழிமுறையை பின்பற்றுவது வீட்டின் உட்புற மாசுபாட்டை குறைக்க உதவும்.

  2. வெற்றிடம்: வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கரப்பான் பூச்சி மற்றும் நாய் மூலம் உருவாகும் அலர்ஜி போன்றவை நாம் உட்காரும், விளையாடும், தூங்கும் இடங்களில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தரை விரிப்புகள், தரை தளங்களில் செல்லப்பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடப்பது, அவற்றின் அழுக்குகள் படிந்திருப்பது மூலமாகவும் மாசுக்கள் அதிகரிக்கலாம். ஷோபாவை தூசு தட்டும்போதோ, குஷனில் அமர்ந்து விளையாடும்போதோ காற்றில் தூசு பறப்பதை காண முடியும். அவற்றில் தங்கி இருந்த தூசுவை நாம் சுவாசிக்க நேரிடும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும். எந்தவொரு பொருளையும் சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தால் அவற்றில் தூசுக்கள் படிந்திருப்பதை காணலாம். வீட்டுக்குள் தூசுக்களை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, வெற்றிடமாக வைத்திருப்பதுதான். அதாவது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதிக வெற்றிடங்களை உருவாக்க வேண்டும்.

  3. வாசனை திரவியங்கள்: நிறைய பேர் அறைக்குள் நிலவும் கெட்ட வாசத்தை போக்குவதற்கு 'ரூம் பிரஷ்னர்களை' உபயோகிப்பார்கள். அவை நல்ல வாசத்தை கொடுக்கும் என்றாலும் அதனை நுகர்வதை தவிர்க்க வேண்டும். அறை முழுவதும் வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்துவிட்டு உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதன் வாசம் நீங்கிய பிறகு அறைக்குள் நுழையலாம். ஏனெனில் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் காற்றிலும், மாசுக்களிலும் கலப்பதை நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

  4. சமையல்: சமைக்கும்போது கையாளும் சில வழிமுறைகள் கூட மாசுபாட்டை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொரிக்கும்போது அவற்றில் இருந்து வெளிப்படும் துகள்கள் மாசுபாட்டை உருவாக்கும். சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும். ஆதலால் சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும். வெளிப்புற காற்று மாசுபாடு பிரச்சினை இல்லாவிட்டால் ஜன்னலை திறந்துவைத்துக்கொள்ளலாம். சுத்திகரிப்பானையும் நிறுவலாம். சமையல் அறை மட்டுமின்றி மற்ற அறைகளிலும் காற்று சுத்திகரிப்பானை நிறுவுவது மாசு பிரச்சினையை கட்டுப்படுத்தும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 
   
  மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை. எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.  

  காற்று மாசு

  எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால்  கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று அறிவித்தார். அதேசமயம், பிளம்பிங் வேலை, உட்புற அலங்காரம், மின்சார வேலை மற்றும் தச்சு வேலை போன்ற மாசுபடுத்தாத கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறினார். 

  அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7 வரை தொடரும், அதே நேரத்தில் எரிவாயுவால் இயக்கப்படும் லாரிகள் மற்றும் மின்சார லாரிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

  கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 

  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் திங்கட்கிழமை தொடங்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நகரின் 14 பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்  குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக, அரசு சிறப்பு பேருந்து சேவையையும் தொடங்கியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தடை உத்தரவு தொழிலாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 
   
  மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை. எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. மேலும், தடை செய்யப்பட்ட காலத்திற்கு தொழிலாளர் வரியாக வசூலிக்கப்படும் நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு  நிதியுதவி வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. 

  காற்று மாசு

  உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். இந்த தடை உத்தரவு தொழிலாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், இதற்கான திட்டத்தை தயாரிக்க தொழிலாளர் துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 
   
  மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி வகுப்புகள், நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என்றார்.

  அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

  அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, எரிவாயுவால் இயக்கப்படும் வாகனங்கள், மின்சார வாகனங்கள் மட்டும் நவம்பர் 27 முதல் டெல்லிக்குள் அனுமதிக்கப்படும். மற்ற எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் நுழைவதற்கான தடை டிசம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும் எனறும் அமைச்சர் தெரிவித்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் நவம்பர் 26-ம் தேதி வரை அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  இதற்கிடையே, நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

  மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 21-ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
   
  இந்நிலையில், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைய விதிக்கப்பட்ட தடை நவம்பர் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

  காற்று தர நிர்வாக ஆணையத்தால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது டெல்லி அரசு தெரிவிக்கும்வரை டெல்லிக்குள் வாகனங்களை இயக்கக் கூடாது என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவைப்பட்டால் காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  புதுடெல்லி:

  டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது.  டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என, டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் டெல்லி அரசு உத்தவிட்டது. மேலும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. 

  டெல்லி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நகரங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

  இந்நிலையில், காற்றின் தரம் சீரடையாததால் பள்ளகிள் அனைத்தும்ட தொடர்ந்து மூப்பட்டிருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது, ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய குறிப்பிட்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஆணையர் தெரிவித்தார்.
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையிலேயே உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

  இந்நிலையில், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில், டெல்லி நகருக்குள் வரும் 21ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

  காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய குறிப்பிட்ட நடைமுறைளை, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் துறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஆணையர் மணீஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

  அனைத்து லாரி தொழிற்சங்கங்கள், உரிமையாளர்கள் மற்றும்  லாரி டிரைவர்கள் தங்களது வாகனங்களை டெல்லி எல்லைக்கு வெளியே உள்ள குடோன்கள், போக்குவரத்து மையங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் நவம்பர் 21 ஆம் தேதி வரை தங்கள் சொந்த ஏற்பாட்டில் நிறுத்திக்கொள்ள வேண்டும். காற்று தர நிர்வாக ஆணையத்தால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது டெல்லி அரசு தெரிவிக்கும்வரை டெல்லிக்குள் வாகனங்களை இயக்கக்கூடாது எனவும்  சிறப்பு ஆணையர் மணீஷ் குமார் அகர்வால் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் காற்று மாசு காரணமாக ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது.

  புதுடெல்லி:

  டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு பரவி வருகிறது. காற்று மாசுவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த காற்று தரமேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  இதையொட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வருகிற 21-ந் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது. 

  விமான நிலையம்

  டெல்லியை சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 5 மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வருகிற 30-ந் தேதி வரை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படியுங்கள்...செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகளவில் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று மோசமான காற்றின் தரத்தில் மும்பை 6-வது இடத்தில் இருந்தது. டெல்லி முதல் இடத்தில் இருந்தது.
  மும்பை :

  இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. நிதிதலைநகர் மும்பையில் வாகனப்பெருக்கம், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகளால் காற்றின் தரம் குறைந்து உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மும்பையில் காற்றின் தரம் மோசமாகி உள்ளது.

  காற்றின் தரம் மற்றும் வானிலை ஆய்வு, ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினம் நகரில் காற்றின் தரம் 245 ஏ.கியூ..ஐ.யும், நேற்றும் 280 ஏ.கியூ.ஐ.யும் பதிவாகி உள்ளதாக கூறியுள்ளது. இந்த அளவு காற்றின் தரம் மோசமாக உள்ளதை குறிக்கிறது.

  உலகளவில் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று மோசமான காற்றின் தரத்தில் மும்பை 6-வது இடத்தில் இருந்தது. டெல்லி முதல் இடத்தில் இருந்தது. இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக உருவான வெப்பநிலை மாற்றத்தால் நகரில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு அதிகரித்து இருப்பதாக வல்லுநர்கள் கூறினர்.

  இதேபோல கடந்த 2 நாட்களாக மும்பையின் கொலபா, மஜ்காவ் மற்றும் பி.கே.சி. பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக அதாவது 300 ஏ.கியூ.ஐ.க்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காற்று மாசு குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

  புதுடெல்லி:

  டெல்லியில் ஏற்கனவே வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் காற்று மாசு அதிகமாக உள்ளது.

  அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லி அருகே உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவு பொருட்களை வயல்வெளிகளில் போட்டு எரிப்பது வழக்கம். அந்த மாசுவும் காற்றோடு கலந்து டெல்லியை தாக்கும்.

  தற்போது இதேபோல பயிர்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறுகிறார்கள். எனவே பள்ளிகளை மூடுவதுடன் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

  இந்த நிலையில் இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஒரே வழக்காக மாற்றி சுப்ரீம்கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூரியகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சு இந்த விசாரணையை நடத்தியது.

  கடந்த சனிக்கிழமை விசாரணை நடந்தபோது காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்தலாம். இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் திங்கட்கிழமை (இன்று) பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

  இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மாநில அரசு சார்பில் அளித்த பதிவில் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.

  இந்த வி‌ஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட வேண்டாம். காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து செலவு செய்யுங்கள்.

  டெல்லியில் உச்சகட்ட காற்று மாசு

  டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு 7 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் தான் மாசு ஏற்படுகிறது என்ற வாதம் சரியானதல்ல. பயிர்களை எரிப்பதால் 10 சதவீதம் தான் மாசு பாதிப்பு ஏற்படுகிறது. மீதி பாதிப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே அதை விரிவாக ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதில் அவசரமாக செயல்பட வேண்டும்.

  தேவைப்பட்டால் டெல்லியில் வாகன போக்குவரத்தை 3 நாட்களுக்கு நிறுத்தி வையுங்கள். காற்று மாசு குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும். காற்றுத்தர கண்காணிப்புக் குழு அண்டை மாநிலங்களுடன் இதுபற்றி பேச வேண்டும்.

  இது சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுத்து நாளை மத்திய, மாநில அரசுகள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

  இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

  இதையும் படியுங்கள்...அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என டெல்லி துணை முதல்வர் சிசோடியா கேட்டுக்கொண்டார்.
  புதுடெல்லி:

  டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதையடுத்து  காற்று மாசை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால்  உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும், கட்டுமான பணிகள் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

  இந்நிலையில், மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களின் என்ஜினை ஆப் செய்வது மற்றும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நாளாவது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது போன்ற சிறிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், டெல்லியை ஆரோக்கியமான மற்றும் மாசு இல்லாத நகராக மாற்ற முடியும், என்றார்.

  நாமாக முன்வந்து மாசுபாட்டைக் குறைப்பது நமது கடமை என்று கூறிய சிசோடியா, டெல்லியை மாசு இல்லாத நகரமாக மாற்ற, ஒவ்வொரு குடிமகனும் மாசுபாட்டைக் குறைக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  “தொழில்துறை மற்றும் கட்டுமான தொழில் செய்வோர், மாசுபாட்டின் பங்களிப்பை குறைக்க வேண்டும். கட்டுமான தளத்தில், குறைந்த அளவு தூசி பறக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கிய கட்டுமானத் தளங்களில் மாசுக்கட்டுப்பாட்டு கருவியை நிறுவி, தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். தொழில்துறையும் அதன் மாசுபாட்டின் பங்கைக் குறைப்பதற்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சமீபத்திய வளங்களை நோக்கி நகர வேண்டும்” என்றும் அமித் ஷா பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo