என் மலர்

  நீங்கள் தேடியது "Lahore"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள அவரது பிறந்த இடம் மற்றும் புனித தலங்களை தரிசனம் செய்வதற்காக 3800 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது. #GuruNanakJayanti #PakistanVisa
  புதுடெல்லி:

  குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவரது பிறந்த இடமான நங்கானா சாகிப் பகுதி மற்றும் அங்குள்ள சீக்கிய புனித தலங்களுக்கு சென்று சீக்கியர்கள் வழிபடுவது வழக்கம். இந்த பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் அருகே உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்கள் அங்கு வழிபடுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் விசா வழங்குகிறது.

  இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தி இன்று முதல் 30-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நங்கானா சாகிப் பகுதிக்கு சென்று வழிபடுவதற்காக ஏராளமான சீக்கியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3800க்கும் மேற்பட்டோருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது. இதேபோல் உலகின் பிற நாடுகளில் வசிக்கும் சீக்கியர்களுக்கும் பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.

  கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் விசா வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் கூறுகையில், ‘இந்த ஆண்டு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 3800க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு விசா அளித்துள்ளோம். நமது சகோதர, சகோதரிகளின் இந்த ஆன்மிகப் பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.  #GuruNanakJayanti #PakistanVisa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் மனைவி குலசூம் லண்டனில் மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல் இன்று லாகூர் கொண்டு வரப்பட்டது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. #NawazSharif #KulsumNawaz
  லாகூர்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம்தேதி உயிரிழந்தார். 68 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு அவரது உயிர் பிரிந்தது.  இதையடுத்து, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப், அவரது மகள் மர்யம், மருமகன் சப்தார் ஆகியோர் குல்சூம் நவாசின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் வழங்கப்பட்டது. மூவரும் பரோலில் வந்ததும் சூல்சூம் உடலை பாகிஸ்தான் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

  குல்சூம் உடலை பெறுவதற்காக நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்றார். அங்கு சட்ட நடைமுறைகளை முடித்தபின்னர் குல்சூம் உடலை பெற்றுக்கொண்டு, விமானம் மூலம் இன்று பாகிஸ்தானுக்கு கொண்டு வந்தனர். அவருடன் குல்சூமின் மகள் அஸ்மா, பேரன் ஜாயித் உசைன் ஷெரிப் மற்றும் 11 குடும்ப உறுப்பினர்கள் லண்டனில் இருந்து வந்து சேர்ந்தனர்.

  காலை 6.45 மணிக்கு அவரது உடல் லாகூர் விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து ஜதி உம்ரா அருகில் உள்ள ஷெரிப் மருத்துவ நகருக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலையில் இறுதிச்சடங்கு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

  ஊழல் வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், குல்சூமின் மகன்கள் ஹசன், உசைன் நவாஸ் ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்க நாடு திரும்பவில்லை. #NawazSharif #KulsumNawaz

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று நாடு திரும்பும் நிலையில், அவரை வரவேற்க காத்திருப்போர் கழுதை கூட்டம் என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித்தலைவர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். #Pakistan #NawazSharif #ImranKhan
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் இன்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

  அதேசமயம், பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் என பலர் லாகூரில் கூடியுள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருப்பது கழுதை கூட்டம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது நவாஸ் ஷெரீப் கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NawazSharif #ImranKhan 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். #PakistanRains
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 238 மி.மீ அளவு மழை பெய்து பெரும் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், மழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

  மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளதால் மீட்புப்படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். #PakistanRains
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் லாகூரில் நடைபெற உள்ள மறைந்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக 300 இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது. #Pakistan
  இஸ்லாமாபாத்:

  19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

  இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்கின்றனர். இதையொட்டி, சீக்கிய யாத்ரீகர்கள் 300 பேருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வழங்கியுள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி பகுதியில் இருந்து லாகூருக்கு சிறப்பு ரெயிலையும் பாகிஸ்தான் ரயில்வே அறிவித்துள்ளது.  #Pakistan
  ×