search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Pakistan #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சிறைக்குள்ளேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து, உடல்நிலையை காரணம் காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
    7 பேர் விடுதலைக்காக நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமி‌ஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார்.

    போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 190, 290, 353 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அதில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அப்போது போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், எனவே வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வைகோ கோர்ட்டில் ஆஜர் ஆக சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எழும்பூர் கோர்ட்டில் வைகோ இன்று ஆஜர் ஆனார்.

    அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பிறகு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்காகவும் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    இதன் தொடர்ச்சியாக 3 பேரின் தூக்கு தண்டனை ரத்தானது. எந்தெந்த வழிகளில் எல்லாம் 7 பேருக்காக நான் போராடினேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இப்போது தமிழ் ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியும் தமிழக கவர்னர் காலதாமதம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசே காரணம். தமிழக அரசும் அதற்கு துணை போகிறது.

    தற்போது நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    7 பேர் விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வைகோ ஆதரவு தெரிவிக்க மறுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சென்னை எழும்புரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பங்கேற்றார்.

    கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. #MDMK #Vaiko

    கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். #canada #FireAccident
    டொரண்டோ:

    கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறினர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் சிரியா அகதிகள் ஆவர். #canada #FireAccident
    ஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    பாக்தாத்:

    ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவி இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.

    கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 
    பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். #Arputhammal #Perarivalan
    தேனி:

    தேனியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினர்.

    நானும் நேரடியாக கவர்னரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக பரிந்துரை செய்வதாக கூறினார். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் அந்த கோப்பில் கையெழுத்திடாமல் உள்ளார்.

    இந்த வி‌ஷயத்தில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் கூறுகிறார். கவர்னர் ஏன் தாமதிக்கிறார்? அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார்? என்பது தெரியவில்லை.

    ஏற்கனவே விடுதலையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த 7 பேரும் மீண்டும் காத்திருப்பது கொடுமையானது. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் எதிர்ப்பால் விடுதலை அறிவிப்பு சாத்தியமின்றி போனது. 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகனுக்கு தற்போது 47 வயதாகிறது.



    28 வருடங்களாக சிறை வாழ்க்கையை அனுபவித்த அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு தாயாரின் கடமையாக நினைத்து முயற்சி எடுத்து வருகிறேன். தமிழக மக்கள் மற்றும் பெரும்பாலான அரசியல் கட்சியினர் எனது கோரிக்கையை ஆதரிக்கின்றனர். இப்பிரச்சினையில் அரசே ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதில்லை. 7 பேர் விடுதலைக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Arputhammal #Perarivalan
    பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர். #ParisBuildingFire
    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எர்லாங்கர் வீதியில் பழமை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் மேல் தளத்துக்கும் பரவியது.

    2 தளங்களிலும் உள்ள வீடுகளில் தீ பற்றி எரிந்தது. வீடுகளில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ பற்றி எரிவதை அவர்களால் உணரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் வீடு முழுவதையும் தீ சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

    நாலாபுறமும் பற்றி எரியும் தீயின் மத்தியில் தாங்கள் இருப்பதை உணர்ந்து அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பின் கீழ் தளங்களில் இருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    தங்களது குடியிருப்பின் மேல் தளங்களில் தீ எரிந்துகொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் கட்டுக்குள் அடங்காத வகையில் இருந்ததால் தீயை அணைப்பது சவாலாக இருந்தது. இதற்கிடையில் மேல் தளங்களில் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தவர்களை மீட்கும் முயற்சியும் ஒரு புறம் நடந்தது.

    எனினும் ஒரு குழந்தை உள்பட 10 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்கள் தீயில் கருகி கரிக்கட்டைகளாகி இருந்தனர். அதே சமயம் பலர் தீயில் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு ஏறி தஞ்சம் அடைந்தனர்.

    அவர்களை ராட்சத ஏணிகள் மூலம் மீட்டனர். இப்படி 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த தீக்காயமும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதே போல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 வீரர்களும் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி விடியவிடிய நடந்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியான தகவல் வெளியானது. அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதும், வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ParisBuildingFire
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். சிலர், அருகில் உள்ள கட்டிடத்தின் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    தீயை அணைத்த பின்னர் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது, 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParisBuildingFire
    இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது 7 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் அனைவரும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 870 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 29 லட்சம் ஆகும்.

    தங்கம் கடத்தி வந்த 7 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் 4 பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 3 பேரும் சென்னை வாலிபர்கள். அவர்கள் குருவியாக செயல்பட்டு தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    தங்கம் கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யாருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport
    சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus
    டமாஸ்கஸ்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. 4-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்தனர். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Syria #ApartmentFire #Damascus 
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Motorola #Smartphones



    மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று புதிய மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் முதலாவதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    மோட்டோரோலா சார்பில் பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கும் விழாவில் அந்நிறுவனத்தின் மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ், ஜி7 பிளே மற்றும் ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய ஸ்மார்ட்போன்களின் ரென்டர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களில் சற்றே அகலமான நாட்ச் மற்றும் 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.



    மோட்டோ ஜி7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.24 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்



    மோட்டோ ஜி7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.24 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்



    மோட்டோ ஜி7 பிளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    மோட்டோ ஜி7 பவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோ ஜி7 பிளே மற்றும் ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களின் விலை 149 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.12,075) என்றும் 209 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.16,935) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 
    இமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். #HimachalAccident
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

    இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் டிரைவர் என 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HimachalAccident
    உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் சாலையோர குடிசைகள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UPAccident
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சந்தவுலி மாவட்டம் வழியாக கால்நடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி மால்டா கிராமத்தின் அருகில் சென்றபோது, தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலைதடுமாறிய லாரி
    சாலையோர குடிசைகள் மீது வேகமாக மோதியது.

    இந்த திடீர் விபத்தில் குடிசையில் இருந்தவர்களில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரு சிறுமி படுகாயம் அடைந்தார்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். #UPAccident
    ×