search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reject"

    ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Pakistan #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சிறைக்குள்ளேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து, உடல்நிலையை காரணம் காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.
    இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #Pakistan #SupremeCourt #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார்.

    அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.



    அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு காலாவதியாகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது கடந்த பாராளுமன்ற காலகட்டத்தில் போடப்பட்டது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். #Pakistan #SupremeCourt #ImranKhan
    இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் போலீஸ் அதிகாரிகள் மனுக்களை ஆமதாபாத் சி.பி.ஐ. கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது. #IshratJahan #FakeEncounter
    ஆமதாபாத்:

    மராட்டிய மாநிலம், மும்பரா பகுதியை சேர்ந்த இஸ்ரத் ஜஹான் (வயது 19) என்ற பெண்ணும், அவரோடு சேர்ந்த மேலும் 3 பேரும், குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை கொல்லும் சதித்திட்டத்துடன் வந்ததாக போலீசார் கூறினர்.

    ஆனால் அவர்கள் போலீசாரால் போலி ‘என்கவுண்ட்டர்’ நடத்தி கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது.

    2004-ம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ந்தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில், இஸ்ரத் ஜஹான் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, மாநில முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகள் வன்ஜாரா, என்.கே. அமீன் ஆகியோர் ஆமதாபாத் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜே.கே.பாண்டியா நிராகரித்து உத்தரவிட்டார்.

    மேலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 197-ன் கீழ் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதா, இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு குஜராத் மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.     #IshratJahan #FakeEncounter #Tamilnews
    பாவ மன்னிப்பு நிகழ்ச்சி குறித்த மகளிர் ஆணைய பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். #AlphonsKannanthanam #PMModi
    கொச்சி:

    கேரள மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை சில பாதிரியார்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவாலயங்களில் நடைபெறும் பாவ மன்னிப்பு நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக சில பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றை தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா மத்திய அரசிடம் வழங்கினார்.



    ஆனால் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பாவ மன்னிப்பு நிகழ்ச்சி, கிறிஸ்தவ தேவாலயங்களின் அடிப்படை நம்பிக்கை’ எனக்கூறி உள்ளார்.

    இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, இது குறித்து பரிசீலிப்பதாக அல்போன்ஸ் கன்னன்தானத்திடம், ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  #AlphonsKannanthanam #PMModi  #Tamilnews 
    ×