search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special CBI Court"

    இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் போலீஸ் அதிகாரிகள் மனுக்களை ஆமதாபாத் சி.பி.ஐ. கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது. #IshratJahan #FakeEncounter
    ஆமதாபாத்:

    மராட்டிய மாநிலம், மும்பரா பகுதியை சேர்ந்த இஸ்ரத் ஜஹான் (வயது 19) என்ற பெண்ணும், அவரோடு சேர்ந்த மேலும் 3 பேரும், குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை கொல்லும் சதித்திட்டத்துடன் வந்ததாக போலீசார் கூறினர்.

    ஆனால் அவர்கள் போலீசாரால் போலி ‘என்கவுண்ட்டர்’ நடத்தி கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது.

    2004-ம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ந்தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில், இஸ்ரத் ஜஹான் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, மாநில முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகள் வன்ஜாரா, என்.கே. அமீன் ஆகியோர் ஆமதாபாத் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜே.கே.பாண்டியா நிராகரித்து உத்தரவிட்டார்.

    மேலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 197-ன் கீழ் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதா, இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு குஜராத் மாநில அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.     #IshratJahan #FakeEncounter #Tamilnews
    ×