search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 உலகக்கோப்பை கிரிக்கெட்"

    காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்டெயின் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.

    உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷாய் ஹோப் சதம் அடிக்க லிவிஸ் மற்றும் அந்த்ரே ரஸல் அரைசதம் அடிக்க வெஸ்ட் இணடீஸ் 421 ரன்கள் குவித்தது.
    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.


    அந்த்ரே ரஸல்

    கிறிஸ் கெய்ல் 22 பந்தில் 36 ரன்களும், லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 32 பந்தில் 47 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.


    ஹோல்டர்

    பின்னர் 422 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், எம்எஸ் டோனி சதம் அடித்த வங்காளதேசத்திற்கு 360 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை கார்டிபில் எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 1 ரன் எடுத்த நிலையிலும், ரோகித் சர்மா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 102 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.



    லோகேஷ் ராகுல் 99 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எம்எஸ் டோனி 78 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 113 ரன்கள் குவித்து வெளியேறினார். இருவரின் சதத்தால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.

    பின்னர் 360 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
    யார்க்கர் பந்துடன் தனது ‘ஸ்லோ பால்’ பந்து வீச்சு முறையுடன் எதிரணியை அச்சுறுத்தும் மலிங்கா, அதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதில் வல்லவர். அத்துடன் பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவிற்கு ‘ஸ்லோ பால்’-களை அற்புதமாக வீசக்கூடியவர்.

    140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மலிங்கா, திடீரென 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் மிகவும் மெதுவாக வீசுவார். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் ‘ஸ்லோ பால்’கள்தான் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றும். யார்க்கருக்குப் பிறகு இதுதான் மலிங்காவின் பிரம்மாஸ்திரமாகும்.

    தற்போது உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 44.5 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த போட்டி முடிந்த பின்னர் லசித் மலிங்காவிடம் சென்று ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸ் ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். தன்னுடைய மிகப்பெரிய பலமாக கருதப்படுவதின் ரகசியத்தை பற்றி கேட்கிறாரே? என்று நினைக்காமல் உடனடியாக அதுபற்றி கற்றுக் கொடுத்தார்.

    மிகப்பெரிய தொடரில் மோதும் நிலையில் இப்படி கற்றுக் கொடுத்துள்ளீர்களே? என்று மலிங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மலிங்கா கூறுகையில் ‘‘ஸ்டாய்னிஸ் என்னிடம் வந்து ‘ஸ்லோ பால்’ வீசுவது எப்படி என்று கேட்டார். ஷார்ட் பார்மட் போட்டியில் விதவிதமான பந்துகளை (variation) வீசுவது முக்கியமானது. எந்தவொரு வீரர் விரும்பினாலும், எல்லாவித டிப்ஸ்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு ‘ஸ்லோ பால்’கள் வீசுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தேன். அவருடன் இதை பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடியுள்ள ஆஸ்திரேலிய அணியை நோக்கி மூன்று கேள்விகள் காத்திருக்கின்றன.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட்டில் தனது உத்வேகத்தை இழந்தது. தோல்விமேல் தோல்விகளை சந்தித்தது.

    இதனால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குக் கூட முன்னேறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில்தான் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா அணியின் மீதான எதிர்பார்ப்பு மளமள என உயர்ந்தது. இதனால் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வார்னர், ஸ்மித் ஆகியோர் தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அந்த அணி கூடுதல் பலத்துடன் விளங்குகிறது.

    வார்னர், ஸ்மித் இல்லாத நேரத்தில் கவாஜா தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஷேன் மார்ஷ் இணைந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் வார்னர், கவாஜா சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் அந்த அணிக்கு முக்கியமான மூன்று கேள்விகள் காத்துக் கொண்டிருக்கிறன.

    முதல் கேள்வி:-



    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. குறிப்பாக கவாஜாவுக்கு இடம் கிடைத்தால், அவரால் தொடக்க வீரராக களம் இறங்க முடியுமா?, அப்படி என்றால் வார்னர் அல்லது ஆரோன் பிஞ்ச் ஆகியோரில் ஒருவர் 3-வது இடத்தில் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை ஆஸ்திரேலியா எப்படி சரி செய்யும் என்பது மிகப்பெரிய கேள்வியே.

    2-வது கேள்வி:



    கேப்டன் ஆரோன் பிஞ்ச் உலகக்கோப்பையில் ஆடம் ஜம்பாதான் முதல் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று கூறினார். ஆனால் பயிற்சி ஆட்டத்தின்போது நாதன் லயனுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா மூன்று முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். அப்போது இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால், முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்பது 2-வது கேள்வி.

    3-வது கேள்வி:



    மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஏராளமான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, இவரையும் உலகக்கோப்பைக்காக தயார் செய்து வைத்துள்ளது. இவர்களுக்கு துணையாக பந்து வீசும் ஹசில்வுட் அணியில் இல்லை. ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் அணியில் இடம் பெறவில்லை.

    நாதன் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெரேண்டர்ப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பது மூன்றாவது கேள்வி. இந்த மூன்று கேள்விக்கும் உரிய பதிலோடு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ளும்.
    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இருக்கும் என கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் என்றாலே வக்கார் யூனிஸ்க்குப் பிறகு சற்றென்று நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. 35 வயதாகும் இவர்  உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வயது மற்றும் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றால் மலிங்காவால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நாளைமறுநாள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், பந்து வீச்சாளர்களால் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்க முடியும். அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, போட்டியில் வெற்றி பெற முடியும்.



    திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை  எந்த அணியில் இடம் பிடித்திருந்தாலும், எந்தவொரு ஆடுகளத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். போட்டியை எப்படி ஆராய வேண்டும் என்பது பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

    நான் கடந்த சில வருடங்களாக விதவிதமான பந்து வீச்சுக்கள் (variations) மீது கவனம் செலுத்தி வருகிறேன். இது எனக்கு உறுதியை அதிக அளவில் கொடுத்துள்ளது. ஆனால், போட்டியில் சூழ்நிலையை நன்கு அறிவது மிக மிக முக்கியம்’’ என்றார்.
    இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ஜடேஜா ஆகிய பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வகையில் வீசக்கூடிய திறமை வாய்ந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவும், சுழற்பந்தில் குல்தீப் யாதவும், சாஹலும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள்’’ என்றார்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் நாளை மறு நாள் (30-ந் தேதி) முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. கார்டிப்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. தேவையற்ற ஷாட்களை ஆடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரவீந்திர ஜடேஜா (54 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (30 ரன்கள்) மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடினார்கள்.

    எனவே இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை சந்திக்கின்றது. இந்திய அணியை வீழ்த்தி இருந்த நியூசிலாந்து அணி தனது வெற்றியை தொடர முயலும். வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. மழையால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. எனவே இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தீவிரம் காட்டும்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும். என்னை பொறுத்தமட்டில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாக சொல்லுகிறேன். அந்த அணியின் நடப்பு பார்மும், ஆட்டமும் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அதிக ரன்களை குவித்து வருகிறது.

    இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் கடைசி கட்டம் வரை நன்றாக ஆடுகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் அந்த அணிகளின் ஆட்டத்தில் 20 ஓவர் ஆட்டத்தின் அதிரடி தாக்கம் அதிகம் இருக்கும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

    இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் நன்றாக செயல்படும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் நல்ல அணியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியை கருப்பு குதிரை எனலாம். அந்த அணி நன்றாகவும் விளையாடும். மோசமாக செயல்படவும் வாய்ப்பு உண்டு. வெஸ்ட்இண்டீசும், பாகிஸ்தான் அணியும் ஒரே மாதிரி குணம் கொண்டவையாகும். இந்த உலக கோப்பை போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கையில் அந்த அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த அணியினர் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு மெக்ராத் கூறினார்.
    ஆப்கானிஸ்தானை 160 ரன்னில் சுருட்டியதுடன், 17.3 ஓவரில் சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    இங்கிலாந்து அணி உலகக்கோப்பைக்கான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்டது. லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜாப்ரா ஆர்சர் (3), ஜோ ரூட் (3) ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ரன்னில் சுருண்டது.

    ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முகமது நபி 44 ரன்களும், தவ்லாட் ஜத்ரான் 20 ரன்களும் அடிக்க ஆப்கானிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    அதன்பின் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆட்டமிழக்காமல் 46 பந்தில் 89 ரன்கள் குவிக்க 17.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளதால் ஐசிசி மகிழ்ச்சியில் உள்ளது.
    ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    ‘ரவுண்ட் ராபின்’ முறை இந்த உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதால், 45 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என 48 ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன.

    இதற்கான டிக்கெட்டை ஐசிசி விற்பனை செய்து வருகிறது. ரசிகர்கள் எளிமையான வகையில் டிக்கெட்டுக்களை வாங்குவதற்கான வழிவகைகளை ஐசிசி செய்து கொடுத்துள்ளது. அதன் விளைவாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வோர்த்தி தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரசிகைகைள் டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சம் பேர் 16 வயதிற்குட்பட்டோர் என தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள மார்க் வுட்டுக்கு எந்த பிரச்சனையில் இல்லை என ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    இங்கிலாந்து அணி நேற்றுமுன்தினம் உலகக்கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் இங்கிலாந்து அணி நிர்வாகம் முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து காயத்தின் வீரியம் குறித்து தெரிந்து கொள்ள முடிவு செய்தது.

    இதனால் அவரின் கணுக்கால் பகுதியில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் பயப்படக்கூடிய அளவிற்கு காயம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி நிம்மதி அடைந்துள்ளது.
    ×