search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்கப்போவது யார்?: யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா கணிப்பு
    X

    ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்கப்போவது யார்?: யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா கணிப்பு

    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான இருக்கும் என கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டியில் யார்க்கர் என்றாலே வக்கார் யூனிஸ்க்குப் பிறகு சற்றென்று நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. 35 வயதாகும் இவர்  உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

    வயது மற்றும் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றால் மலிங்காவால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நாளைமறுநாள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்கள் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருப்பார்கள் என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், பந்து வீச்சாளர்களால் ‘கேம் சேஞ்சர்ஸ்’ ஆக இருக்க முடியும். அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, போட்டியில் வெற்றி பெற முடியும்.



    திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை  எந்த அணியில் இடம் பிடித்திருந்தாலும், எந்தவொரு ஆடுகளத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். போட்டியை எப்படி ஆராய வேண்டும் என்பது பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

    நான் கடந்த சில வருடங்களாக விதவிதமான பந்து வீச்சுக்கள் (variations) மீது கவனம் செலுத்தி வருகிறேன். இது எனக்கு உறுதியை அதிக அளவில் கொடுத்துள்ளது. ஆனால், போட்டியில் சூழ்நிலையை நன்கு அறிவது மிக மிக முக்கியம்’’ என்றார்.
    Next Story
    ×