search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "144 தடை"

    போலீசாரின் கெடுபிடி காரணமாக இந்த முறை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பலவிதமான கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.

    வழக்கமாக மண்டல பூஜையின்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து இருமுடி கட்டுடன் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

    போலீஸ் கெடுபிடி காரணமாக இந்த முறை சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது.

    கடந்த 6 நாட்களில் கிடைத்த வருமானத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 63 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மண்டல பூஜையின்போது சபரிமலை மொத்த வருமானம் 6 நாட்களில் ரூ.22 கோடியே 82 லட்சமாக இருந்தது.

    இந்த ஆண்டு ரூ.8 கோடியே 48 லட்சமாக வருமானம் குறைந்துள்ளது. சபரிமலை பிரசாதமான அரவணை மூலம் கடந்த ஆண்டு ரூ.9 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரத்து 90 கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ரூ.3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 750 மட்டும்தான் கிடைத்துள்ளது. காணிக்கை வருமானமும் ரூ.7 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 285-ல் இருந்து ரூ.3 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 550 ஆக குறைந்து விட்டது.

    சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டதால் விடுதி அறைகள் மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த முறை தேவசம் போர்டுக்கு கிடைக்கவில்லை. #Sabarimala
    சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை திறக்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களை கருத்தில் கொண்டு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 41 நாட்களுக்கு கோவில் சாமி தரிசனத்திற்காக திறந்து இருக்கும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்பு உள்ளதால் மாநில அரசு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மேலும் சபரிமலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களை கருத்தில் கொண்டு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவங்கல் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். #Sabarimala #SabarimalaTemple
    சபரிமலையில் 5-ந்தேதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple #Section144
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் அவர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத நடை திறப்பின் போது சபரிமலைக்கு சென்ற இளம்பெண்களையும் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் போலீசாருக்கும் சபரிமலையில் மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு உருவானது.



    இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி திங்கட்கிழமை மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    5-ந்தேதி நடை திறப்பையொட்டி இந்த முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதையொட்டி சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல், பம்பை ஆகிய இடங்களில் இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வந்தால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை நடை திறப்பையொட்டி ஏ.டி.ஜி.பி. அணில் காந்த் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 ஐ.ஜி.க்கள், 5 எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    நிலக்கல் முதல் சன்னிதானம் வரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். நிலக்கல் வரையே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதன் பிறகு கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலமே பக்தர்கள் செல்ல முடியும்.

    கேரள அரசு பஸ்களையும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிப்பார்கள் என்றும் பிரச்சினையை ஏற்படுத்தும் யாரும் பக்தர்கள் போர்வையில் வந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதற்கிடையில் கோட்டயத்தில் சபரிமலை கர்மசமிதி சார்பில் இந்து அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 126 இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் 13-ந்தேதி வரை தாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், சபரிமலையில் நடை திறக்கப்படும் 5-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் இரவு நடை அடைக்கப்படும் வரை கேரள முழுவதும் நாம ஜெப யாத்திரை போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  #Sabarimala #SabarimalaTemple #Section144
    மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.
    சிவகங்கை:

    மருதுபாண்டியர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்டதுடன், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள் மருது பாண்டியர். மருதுபாண்டியரின் மணிமண்டபம் திருப்பத்தூரில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந்தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அரசு சார்பில் குருபூஜை விழா நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.

    மருது பாண்டியர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் பாதுகாப்புடன் மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று(நேற்று) முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடவோ, பேசவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வி.களத்தூரில் 144 தடை உத்தரவால் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருவிழாவை ஒரு பிரிவினர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடத்துவது எனவும், இதனைத்தொடர்ந்து 3 நாட்கள் சுவாமி வீதி உலா நடத்துவது எனவும் முடிவு செய்திருந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எங்கள் தெருவழியாக கடந்த ஆண்டு நடத்தியது போல ஒரு நாள் மட்டுமே சுவாமி வீதியுலா நடத்த வேண்டும். மூன்று நாட்கள் வீதி உலா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருபிரிவி னரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் கடந்த ஆண்டைப்போலவே ஒரு நாள் மட்டும் சுவாமி வீதி உலா நடத்த வேண்டும். மேலும் வழக்கமாக செல்லும் தெருக்களில் சுவாமி வீதி உலா செல்லாமல், மற்றொரு தெரு வழியாக சுவாமி வீதி உலா நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.



    இதனால் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. திருவிழாவை நடத்தும் பிரிவினர் திட்டமிட்டப்படி நாங்கள் ஆண்டாண்டு காலமாக எப்படி சுவாமி வீதி உலா நடந்ததோஅதேபோல் தற்போதைய திருவிழாவின் போதும் 3 நாட்களும் சுவாமி வீதிஉலா நடத்தியே தீருவோம் என திருவிழாவிற்கான ஏற்பாடு களைசெய்ய தொடங் கினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற் பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு பெரம்பலூர் உதவி கலெக்டர் விசுவநாதன் வி.களத்தூரில் 28-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை 144 தடை உத்தரவு போட்டுள்ளார்.

    தடை உத்தரவு காலங்களில் உள்ள நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த திருவிழா நடத்தும் தரப்பினர் சுவாமி திருவீதி உலா நடத்தும் நிகழ்ச்சியையும், மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியையும் முற்றிலுமாக ரத்து செய்தனர். 144 தடை உத்தரவினால் திருவிழா பாதியிலேயே நின்றது. நேற்று கோவில் வளாகங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வி.களத்தூர் கடைவீதி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தெருக்களில் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது. 
    வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் நாளை (26-ந்தேதி) அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (27-ந்தேதி) காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அன்றைய தினங்களில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேல் கூடுவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்திற்கு கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றால் முன்னதாகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து அனுமதி பெற வேண்டும். மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Section144 #Sengottai
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது.

    அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது,

    இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கருத்துகேட்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில் மீண்டும் தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் தென்மண்டல போலீஸ் ஜ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.



    இக்காலங்களில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  #Section144 #Sengottai
    தென்காசியில் பா.ஜ.க. நிர்வாகியின் கடை உள்பட 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே தென்காசி தாலுகா பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் நேற்றிரவு தென்காசியில் 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் ஜீவன்ராம். இவர் மேல ஆவணி மூலவீதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இரவு இந்த கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் கடையில் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதே போல் வாய்க்கால் பாலத்தில் ராஜாசிங் என்பவரது மளிகை கடைக்கும் தீ வைக்கப்பட்டது. ராஜா சிங் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து தென்காசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ வைத்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    திட்டமிட்ட பாதை வழியாக விநாயகர் ஊர்வலம் செல்லும்போது மீண்டும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. #VinayagarChathurthi #Section144
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஏ.டி.எம். கண்ணாடி உடைக்கப்பட்டது.



    மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் முக்கிய வீதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மதியம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மாலையில் இந்த சிலைகள் குண்டாறில் கரைக்கப்படுகிறது.

    இதனிடையே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்லும் போது மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிராபகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தேவைபட்டால் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்படும். குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VinayagarChathurthi #Section144


    வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. இதில் சென்னை 144-வது இடத்தை பிடித்துள்ளது. #MostExpensiveCity #Chennai #India
    நியூயார்க்:

    வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. 5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.



    இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகராக ஹாங்காங், முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

    இந்தியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வாகி உள்ளது. உலக அளவில் அந்நகரம் 55-வது இடத்தில் உள்ளது. சென்னை 144-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி 103-வது இடத்திலும், பெங்களூரு 170-வது இடத்திலும், கொல்கத்தா 182-வது இடத்திலும் உள்ளன. #MostExpensiveCity #Chennai #India #tamilnews 
    தூத்துக்குடியில் வன்முறையை தொடர்ந்து போலீசார் விதித்திருந்த 144 தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கை பராமரித்திட கடந்த 21ம் தேதி  இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட முன்னாள் கலெக்டர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

    பேரணியாக சென்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு காரணமாக இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது.

    தூத்துக்குடியில் தற்போது இயல்புநிலை திரும்புவதையடுத்து கடந்த 5 நாட்களாக அமலில் இருந்த தடை உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. எனவே, 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார்.   #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடியில் பதற்றம் இன்னும் தனியாத நிலையில் மேலும் நாளை காலை 8 மணி முதல் 27-ந்தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #ThoothukudiCollector
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நேற்று முன்தினம் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான நிலை இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



    இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மூன்று நாட்களாகியும் இதுவரை அமைதி முழுவதுமாக திரும்பவில்லை. கடைகளை திறப்பதற்கான முயற்சிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட நாளை காலை (25-ந்தேதி) 8 மணி முதல் 27-ந்தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் மேலும் மூன்று நாட்கள் 144 நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #ThoothukudiCollector
    ×