என் மலர்

  நீங்கள் தேடியது "canceled"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

  மதுரை

  பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து இன்று (25-ந் தேதி) மற்றும் 26, 27-ந் தேதிகளில் வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் டிசம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ெரயில்கள் ஆகியவை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.

  நாளை (26-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-கோவை விரைவு ெரயில்கள் ஆகியவை இரு மார்க்கத்திலும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

  பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் 9360548465, மண்டபம் ெரயில் நிலையத்தில் 9360544307 ஆகிய அலைபேசி எண்களுடன் உதவி மையம் செயல்படுகிறது என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதலின் படி நவீன தகன மேடை அமைக்கும் பணி ரத்தானது.
  • நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

  கீழக்கரை

  கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.

  பணிகள் ரத்து

  கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்களால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பணி உத்தரவு மற்றும் பணி ஒப்பந்தம் ஆகியவற்றினை ரத்து செய்ய மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்க ப்பட்டது.

  கீழக்கரை நகரில் அமைந்து உள்ள நூலகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத இட நெருக்கடி யான வாடகைக் கட்டி டத்தில் இயங்கி கொண்டி ருக்கிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான கீழக்கரை செம்பி ஆயில் கம்பெனி அருகில் உள்ள இடத்தில் நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

  கூட்டத்தில் நகர் மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் பேசுகையில், கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளுக்கு சரிவர பணிகள் நிறைவேற்ற வில்லை. அனைத்து கவுன்சி லர்களிடமும் நகராட்சி தலைவர் ஆலோசனை செய்து பாரபட்சமில்லா மல் நிதியை அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து ஒதுக்க வேண்டும் என்றார்.

  தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கவுன்சிலர்கள் ஷேக் ஹுசைன், முகமது பாதுஷா ஆகியோர் பேசினர். அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்ற விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் செகா னாஸ் ஆபிதா கூறி னார்.

  பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மேலாளர் தமிழ்ச் செல்வன், உதவியாளர் உதயா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எம்.எம்.கே. முகமது காசிம், சுஐபு, மீரான் அலி, நசீருதீன், பயாஸ்தீன், நவாஸ் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டவாள பராமரிப்பு பணியால் நெல்லை - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
  • சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் பிலாஸ்பூர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22619) ரத்து.

  சேலம்:

  தென் கிழக்கு மத்திய ரயில்வே, நாக்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில்வே தண்டவாளப் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று திருநெல்வேலியில் இருந்து கோவை, திருப்பூர் ,ஈரோடு, சேலம் வழியாக சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் செல்லும் திருநெல்வேலி- பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22620) ரத்து செய்யப்படுகிறது,

  இதேபோல் மறு மார்க்கத்தில் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 5-ந் தேதி புறப்பட்டு மறுநாள் சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் பிலாஸ்பூர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22619) ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
  ஸ்ரீபெரும்புதூர்:

  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.

  பின்னர் படப்பை வந்தார். அங்கு கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடத்தில் பிரசாரம் செய்ய வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கும் நிர்வாகிகள் சிலரே இருந்தனர். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக சென்னை வருவதாக இருந்த அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வர திட்டமிட்டிருந்தார். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் அமித் ஷா வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்றைய பேச்சுவார்த்தையின்போது கூட்டணி அறிவிப்பை அமித் ஷா வெளியிடலாம்  என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

  ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அவர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எனவே, கூட்டணி அறிவிப்பு வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்றபிறகு, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அதன்பின்னர் சென்னை வரலாம் என தெரிகிறது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை-செங்கோட்டை வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
  சென்னை:

  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  * சென்னை எழும்பூர்-செங்கோட்டை வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்:06011) வருகிற 11-ந்தேதி முதல் மார்ச் மாதம் 25-ந்தேதி வரை (மார்ச் மாதம் 4-ந்தேதியை தவிர்த்து) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  * செங்கோட்டை-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06012) வருகிற 12-ந்தேதி முதல் மார்ச் மாதம் 26-ந்தேதி வரை (மார்ச் மாதம் 5-ந்தேதியை தவிர்த்து) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  * சென்னை சென்டிரல்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06007) மார்ச் மாதம் 5 மற்றும் 19-ந்தேதியை தவிர்த்து மார்ச் மாதம் 26-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  * நாகர்கோவில்-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06008) மார்ச் மாதம் 6 மற்றும் 20-ந்தேதியை தவிர்த்து மார்ச் மாதம் 27-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SouthernRailway
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வி.களத்தூரில் 144 தடை உத்தரவால் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
  வேப்பந்தட்டை:

  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருவிழாவை ஒரு பிரிவினர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடத்துவது எனவும், இதனைத்தொடர்ந்து 3 நாட்கள் சுவாமி வீதி உலா நடத்துவது எனவும் முடிவு செய்திருந்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எங்கள் தெருவழியாக கடந்த ஆண்டு நடத்தியது போல ஒரு நாள் மட்டுமே சுவாமி வீதியுலா நடத்த வேண்டும். மூன்று நாட்கள் வீதி உலா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருபிரிவி னரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் கடந்த ஆண்டைப்போலவே ஒரு நாள் மட்டும் சுவாமி வீதி உலா நடத்த வேண்டும். மேலும் வழக்கமாக செல்லும் தெருக்களில் சுவாமி வீதி உலா செல்லாமல், மற்றொரு தெரு வழியாக சுவாமி வீதி உலா நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.  இதனால் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. திருவிழாவை நடத்தும் பிரிவினர் திட்டமிட்டப்படி நாங்கள் ஆண்டாண்டு காலமாக எப்படி சுவாமி வீதி உலா நடந்ததோஅதேபோல் தற்போதைய திருவிழாவின் போதும் 3 நாட்களும் சுவாமி வீதிஉலா நடத்தியே தீருவோம் என திருவிழாவிற்கான ஏற்பாடு களைசெய்ய தொடங் கினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற் பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு பெரம்பலூர் உதவி கலெக்டர் விசுவநாதன் வி.களத்தூரில் 28-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை 144 தடை உத்தரவு போட்டுள்ளார்.

  தடை உத்தரவு காலங்களில் உள்ள நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த திருவிழா நடத்தும் தரப்பினர் சுவாமி திருவீதி உலா நடத்தும் நிகழ்ச்சியையும், மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியையும் முற்றிலுமாக ரத்து செய்தனர். 144 தடை உத்தரவினால் திருவிழா பாதியிலேயே நின்றது. நேற்று கோவில் வளாகங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வி.களத்தூர் கடைவீதி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தெருக்களில் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. #AadharCard
  புதுடெல்லி:

  ஆதார் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இச்சட்டத்தின் 18 பிரிவுகளை ரத்து செய்யவேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஆதார் சட்டத்தில் சில பிரிவுகளை ரத்து செய்தது.

  மேலும் சிலவற்றில் திருத்தங்களை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. குறிப்பாக 5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதார் கைரேகை மற்றும் தகவல்களை தேவைப்படும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்ற 33(2) பிரிவை நீதிபதிகள் மாற்றியமைக்கும்படி உத்தரவிட்டனர். இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அதிகாரிக்கு மட்டுமே இதற்கான அதிகாரத்தை வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  இதேபோல் தனிப்பட்ட நபர் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய வாய்ப்பை வழங்கவேண்டும் என்ற பிரிவிலும் 33(1) திருத்தம் செய்யும்படி தெரிவித்தனர்.இதுபோல் மேலும் 3 சட்டப்பிரிவுகளை ரத்து அல்லது மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்ததை டிரம்ப் ரத்து செய்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. #DonaldTrump #NorthKorea
  வாஷிங்டன்:

  அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த பயணத்தின் போது அவர் வட கொரிய மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்றும், சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உழைக்கப்போவதாக உறுதி அளித்து செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் இந்த பயணத்தை சற்றும் எதிர்பாராத வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்துவிட்டார். ஆனால் அதன் பின்னணி என்ன என்பது வெளிவரவில்லை.  ஏற்கனவே மைக் பாம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய வடகொரிய ஆளும் கட்சியின் துணைத்தலைவர் கிம் யாங் சோல், அமெரிக்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாக தெரியவரவில்லை என்றாலும், அந்த கடிதத்தில் எழுதி இருந்த விஷயங்கள்தான் டிரம்பையும், மைக் பாம்பியோவையும் வட கொரிய பயணத்தை ரத்து செய்ய வைத்து உள்ளது என ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கூறுகிறது. மைக் பாம்பியோவின் பயணத்தை ரத்து செய்தது குறித்து டிரம்ப் அறிவித்தபோது, ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட தான் மேற்கொண்ட முயற்சியில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது நினைவுகூரத்தக்கது. வட கொரிய அரசு ஊடகம், அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சாடி உள்ளது.  #DonaldTrump #NorthKorea
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ElectricTrain #Ticket #MonthlyPass
  சென்னை:

  கடந்த 24-ந் தேதி காலை மின்சார ரெயிலில் படிக்கட்டு அருகே தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்த சுவரில் மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 25-ந் தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார்.  விபத்து குறித்து நேற்று ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 12 ரெயில் பயணிகள் தங்கள் கருத்துகளையும், விபத்து குறித்தும் தெரிவித்தனர். 22 ரெயில்வே ஊழியர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

  இதுபோன்ற ரெயில் விபத்துகளை தடுப்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-

  ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடத்தியுள்ளோம். படியில் தொங்கியபடி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் மாதாந்திர பயணச்சீட்டு(பாஸ்) பறிமுதல் செய்யப்பட்டு, அதை நிரந்தரமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #ElectricTrain #Ticket #MonthlyPass 
  ×