பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து

பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து
Published on

மதுரை

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து இன்று (25-ந் தேதி) மற்றும் 26, 27-ந் தேதிகளில் வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் டிசம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ெரயில்கள் ஆகியவை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.

நாளை (26-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-கோவை விரைவு ெரயில்கள் ஆகியவை இரு மார்க்கத்திலும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் 9360548465, மண்டபம் ெரயில் நிலையத்தில் 9360544307 ஆகிய அலைபேசி எண்களுடன் உதவி மையம் செயல்படுகிறது என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com