search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டையில் இன்று மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கிய போது எடுத்தபடம்.
    X
    செங்கோட்டையில் இன்று மதியம் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கிய போது எடுத்தபடம்.

    செங்கோட்டை, தென்காசியில் 144 தடை - கலெக்டர் அறிவிப்பு

    திட்டமிட்ட பாதை வழியாக விநாயகர் ஊர்வலம் செல்லும்போது மீண்டும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. #VinayagarChathurthi #Section144
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஏ.டி.எம். கண்ணாடி உடைக்கப்பட்டது.



    மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் முக்கிய வீதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மதியம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மாலையில் இந்த சிலைகள் குண்டாறில் கரைக்கப்படுகிறது.

    இதனிடையே திட்டமிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்லும் போது மீண்டும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிராபகர் சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகா பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தேவைபட்டால் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்படும். குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VinayagarChathurthi #Section144


    Next Story
    ×