search icon
என் மலர்tooltip icon
    • சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

    ராசிபுரம்:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அலகில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ராசிபுரம் உட்கோட்டத்தைச் சேர்ந்த மல்லியக்கரை- ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை அகலப்படுத்தும் பணிகளை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்ட பொறியாளர் குணா, சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை அலகின் உதவி கோட்ட பொறியாளர் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக் கட்டுப்பாடு உட்கோட்ட அலகின் உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

    • அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.
    • அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அந்த பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொளத்தூரை சேர்ந்த அங்குபிள்ளை (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.16½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.23.51-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 965-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 189.49½ குவிண்டால் எடை கொண்ட 408 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.30-க்கும், சராசரி விலையாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.39-க்கும், சராசரி விலையாக ரூ.73.16-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 532-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 388.31 குவிண்டால் எடை கொண்ட 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது.

    இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.155.00-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.151.99-க்கும் விலைபோனது.

    வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.158.99-க்கும், சராசரி விலையாக ரூ.158.99-க்கும் என மொத்தம் ரூ.56 லட்சத்து 42 ஆயிரத்து 684-க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    • நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்ப டுகின்றன. இந்த கறிக்கோ ழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ரூ.120 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.122 ஆக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி ரூ.116 ஆக இருந்த கறிக்கோழி விலை, 17-ந் தேதி ரூ.120 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்ட தால் கறிக்கோழி விலை 3 நாளில் ரூ.6 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயிலால் கறிக்கோழியின் எடை குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதா லும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை கோழி விலை எந்த மாற்றமும் செய்யாமல் 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.

    • பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.

    இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
    • ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு தாசில்தார் தாமோதரன், தனி தாசில்தார் தீபசித்தரா, துணை தாசில்தார் ஹரிபிர சாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அந்த மனுக்களில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ் உட்பட்ட மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றிதழ்களை பயனாளர்களுக்கு நேற்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா வழங்கினார்.

    மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா கூறினார்.

    • ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
    • இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன.

    ராசிபுரம்:

    கோடை வெயில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாட்டி வதைத்தது. இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

    இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். காற்று வீசிய சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.

    மழையுடன் காற்று வீசியதால் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    மின்கம்பங்கள் சாய்ந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். மழை பெய்ததன் காரணமாக மாலையில் குளிர்ந்த சீதோஷணம் நிலவியது.

    அதேபோல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் நேற்று மழை பெய்தது.

    சேலம் ஓமலூர் மெயின்ரோட்டில் இறந்த முதியவர் யார்? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி ஓமலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பிரியாணி கடை அருகில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார். அவர் நீலம் மற்றம் வெள்ளை நிற கோடு போட்ட லுங்கியும், ஆரஞ்சு நிற பனியனும் அணிந்திருந்தார். இது பற்றி அக்கம்பக்கத்தினர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. மேலும் இவருடைய பெயர் மற்றும் ஊர் முகவரி எதுவும் தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், அது குறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×