search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in the camp"

    • சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
    • ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு தாசில்தார் தாமோதரன், தனி தாசில்தார் தீபசித்தரா, துணை தாசில்தார் ஹரிபிர சாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அந்த மனுக்களில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ் உட்பட்ட மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றிதழ்களை பயனாளர்களுக்கு நேற்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா வழங்கினார்.

    மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் கடந்த 7-ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.

    மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணி யாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 1,547 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 24 ஆயிரத்து 538 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 278 பேரும் என மொத்தம் 42,363 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×