என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை உயர்வு
    X

    பரமத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை உயர்வு

    • பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.

    இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×