என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மோட்டார் சைக்கிளில் இருவருடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது உறவினர்கள் பார்த்து ஆத்திரம்.
- மாமியாருக்கு சொந்தமான நபருடன் சென்ற போதிலும், உறவினர்கள் கள்ளக்காதல் என சந்தேகப்பட்டு தாக்குதல்.
ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மார்க்கெட்டுக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது, பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்துள்ளனர். அப்போது அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி தகராறு செய்தனர்.
அப்போது கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்களில் ஏற்றிச் சென்ற இரண்டு பேர்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய நபரும், சகோதரன் போன்றவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தந்தை வழி மாமா உள்பட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
- இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடம் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். திரையுலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர்.
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது ஜியோ, ஏர்டெல்-ன் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தினசரி 1ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் முடிவில் தலையிட இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு நிறுவனங்களும் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!
இவ்வாறு அவர கூறினார்.
- பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
- இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
- கனமழையால் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டரில் செல்வது பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், சூரசந்த்பூரில் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டவட்டாக தெரிவித்துள்ளார். இதனால் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதேவேளையில் சாலை வழியாக சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் சாலை வழியாக பிரதமர் மோடி சூரசந்த்பூர் சென்றார். அவருக்கு சாலையின் இரு பக்கமும் மக்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்று அளித்தனர். மேலும், பேரணி நடைபெற்ற இடத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் "மணிப்பூர் மக்களின் உறுதிக்கு சல்யூட். கனமழை பெய்த போதிலும் கூட, மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளனர். உங்களுடைய அன்புக்காக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹெலிகாப்டர் கனமழை காரணமாக இங்கு வர முடியவில்லை. இதனால் நான் சாலை மார்க்கமாக வர முடிவு செய்துள்ளேன். இன்று சாலையில் நான் கண்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் இல்லாமல், நான் சாலை வழியாக வந்தது நல்லது என்று என் மனம் சொல்கிறது.
வழியெங்கும் மூவர்ணக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அன்பும் பாசமும் அளித்த இந்த தருணத்தை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
- நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.
அப்போது, விஜய் ஆளும் தி.மு.க. அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.
எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும்; பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்னைகளில் No Compromise.
நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.
திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் தி.மு.க. அரசு நன்றாக காசு பார்க்கின்றது
அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என தி.மு.க சொன்னது செய்ததா? இப்படியே நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான். தி.மு.க-வினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை
டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனும் வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து எனும் வாக்குறுதி என்ன ஆனது?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எனும் வாக்குறுதி என்ன ஆனது? மின்கட்டண கணக்கீடு மாதம் தோறும் எடுப்பதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?
இவ்வாறு அவர் கூறினார்.
2024-ம் ஆண்டு வெளியான படம் 'ஒரு நொடி'. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான 'ஜென்ம நட்சத்திரம்' என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் செப் 11-ம் தேதி டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியானது.
ஹாரர் த்ரில்லர் கதையாக 'ஜென்ம நட்சத்திரம்' உருவாகி இருக்கிறது. இதில் தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தின் கதைக்களம் தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் கனவில் வந்து போகிறது. மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார். காளி வெங்கடை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு இறந்து போகிறார்.பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரபரப்பான இந்த திரைப்படத்தை இந்த வாரம் உங்கள் கண்களுக்கு விருந்தாக கண்டு களியுங்கள்.
- நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
- இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும்.
- 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகிறது.
இந்த தொடரில் நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய பி அணி, தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் அளவுக்கு திறன் கொண்டது என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் அதுல் வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும். ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர். இப்போது அவர்களை விட நாம் மிகச் சிறந்த அணியாக இருக்கிறோம்.
இவ்வாறு அதுல் வாசன் கூறினார்.
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மு.வீரபாண்டியின், சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
2019-ம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் பயங்கரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தை பார்த்து இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார் அதில் அவர் "'தண்டகாரண்யம்' பார்த்தேன். அதிகாரம் எங்கெல்லாம் எப்படியெல்லாம் எளியவர்கள் வாழ்வில் ஊடுருவி நம்மை முன்னேறவிடாமல் அடிமைகளாக்குகிறது என்பதை சொல்லும் ஆகச்சிறந்த படைப்பு. தோழர் அதியன் ஆதிரையின் திரைக்கதையும் உருவாக்கமும் அவரை தமிழின் மிகச்சிறந்த இயக்குனராக ஆக்குகிறது." என பாராட்டியுள்ளார்
இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.






