என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.
    • தவெகவின் முதல் தேர்தல் பிரசாரம் இது என்பதால், தொண்டர்கள் குவிந்தனர்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரமாக திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றினார்.

    தவெகவின் முதல் தேர்தல் பிரசாரம் இது என்பதால், தொண்டர்கள் குவிந்தனர். இதனால், காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பிரசாரம் மாலை 3 மணிக்கு மேல் தான் தொடங்கியது.

    இந்நிலையில், விஜயின் அரசியல் வருகையையொட்டி திமுக எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது பேசிய அவர்," விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

    தமிழகத்தில் அண்ணா, பெரியார் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது" என்றார்.

    • இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை.
    • காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். 8 கி.மீ. தூரத்தை 4 மணி நேரமாக தொண்டர்கள் வெள்ளத்தில் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்தார். திருச்சி மரக்கடையில் பேசிய விஜய், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை எனக் கூறினார். திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என் விமர்சனம் செய்திருந்தார். பெண்கள் பாதுகாப்பு, திமுக நிறைவேற்றாத வாக்குறுதி குறித்து பேசினார்.

    திருச்சி என்றால் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இதனால் இவர்களைத்தான் அவர் விமர்சனம் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அன்பின் மகேஷிடம், விஜய் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை, அவரது பிரசாரத்திற்கு அதிகமான கூட்டம் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அன்பில் மகேஷ் "முழு விவரத்தையும் இன்னும் நான் பார்க்கவில்லை. இப்போதுதான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளேன். பார்த்தபின் அது சார்ந்து கருத்து சொல்கிறேன்.

    கூட்டம் வந்திருப்பதாக சொன்னார்கள். முழுமையாக பார்த்திவிட்டு, அதன்பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன். விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம்" என்றார்.

    • தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை.

    கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" என்றார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காலவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

    திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை. மக்கள், தொழிலை பற்றி கவலை இல்லாத அரசாக திமுக உள்ளது.

    போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங்கை வீழ்த்தி இருந்தது.
    • இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங்கை வீழ்த்தி இருந்தது. அதே வெற்றியப்பயணத்தை தொடரை வங்காளதேச அணி முயற்சிக்கும்.

    இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

    • போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது.
    • சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், "போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷிய மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சீனா, இந்தியாவைத் தவிர்த்து துருக்கி ரஷியாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது. துருக்கியை தவிர்த்து நேட்டோ அமைப்பில் உள்ள 32 நாடுகளில் ஹங்கேரி, ஸ்லோவாகியா நாடுகளும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன.

    • இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
    • 'இட்லி கடை' படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனனும் நடிக்கிறார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

    'இட்லி கடை' படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனனும், நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இட்லி கடையில் நடிக்கும் தனுஷின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனுஷ் முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    மேலும், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உணவு பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
    • பாகனுடன் யானையைக் காணவில்லை என உரிமையாளர் புகார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யானையைக் காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது, வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்பவர், பலமு மாவட்டத்தில் உள்ள ஜார்காட் பகுதியில் இருந்து யானையையும், பாகனையும் காணவில்லை. யானையைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும், யானைக்கான உரிமை எண்ணையும் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக வன அதிகாரி "பலமுவில் உணவு பற்றாக்குறை காரணமாக, அதன் உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு கொண்டு வந்தார். அங்கிருந்து மர்சாபூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். பலமுவில் யானையை பாகனிடம் ஒப்படைத்தார். அதன்பின் யானையுடன் பாகன் மாயமானார். வன சரக அதிகாரி இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

    • சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் ஆட்டம் டிரா ஆனது
    • தென் கொரியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் சீனா 1- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    ஹாங்சோவ்:

    11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் தகுதி பெற்றன.

    சூப்பர்4 சுற்றில் இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்நிலையில் சூப்பர்4 சுற்றின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.

    இதனையடுத்து நடந்த சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் சீனா - தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த சீனா மற்றும் இந்தியா மோதவுள்ளது.

    அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன்.

    அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை "Naan Thaan CM" என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன். இப்படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.

    படத்தின் முதல் லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டு, பார்த்திபன் நகைச்சுவையான அரசியல் உரையுடன் கூறியுள்ளார்:

    "பெரியோர்களே, தாய்மார்களே,

    வாக்களப் பெருமக்களே!

    ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!

    போடுங்கம்மா ஓட்டு

    Boat'சின்னத்தைப் பாத்து!

    இப்படிக்கு,

    C. M . சிங்காரவேலன் எனும் நான்….

    'சோத்துக் கட்சி'"

    இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பார்த்திபன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பை பார்த்திபனின் Bioscope Film Framers தயாரிக்கிறது

    திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சிபிஐ-ன் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாட்டை மத அடிப்படைவாதம் சுற்றியுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைப்போம்" என்றார்.

    • மோட்டார் சைக்கிளில் இருவருடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது உறவினர்கள் பார்த்து ஆத்திரம்.
    • மாமியாருக்கு சொந்தமான நபருடன் சென்ற போதிலும், உறவினர்கள் கள்ளக்காதல் என சந்தேகப்பட்டு தாக்குதல்.

    ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    மார்க்கெட்டுக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது, பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்துள்ளனர். அப்போது அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி தகராறு செய்தனர்.

    அப்போது கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாக தாக்கினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்களில் ஏற்றிச் சென்ற இரண்டு பேர்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய நபரும், சகோதரன் போன்றவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தந்தை வழி மாமா உள்பட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

    • இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
    • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

    இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

    இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடம் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். திரையுலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர்.

    ×