என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி
- தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" என்றார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காலவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.
திமுக ஆட்சியில் கோவைக்கு பெரிய திட்டம் எதுவும் வரவில்லை. மக்கள், தொழிலை பற்றி கவலை இல்லாத அரசாக திமுக உள்ளது.
போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Next Story






