என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.
- எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான் என்றார் இளையராஜா.
சென்னை:
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது. இதில் இளையாராஜா பேசியதாவது:
இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான்.
சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன்பு வீட்டுக்கே வந்து பாராட்டியவர் முதலமைச்சர். எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.
நான் முதலாவது நன்றி தெரிவிக்க வேண்டியது எனது குழந்தைகளுக்குதான். எனது குழந்தைகளுக்காக நான் நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகளுக்காக செலவிடும் நேரம்தான் சிம்பொனியாக வந்துள்ளது.
சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 139 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேகர் அலி 41ரன்னும், ஷமிம் ஹொசைன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி அணி ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.
கமில் மிஷாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
- இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
- நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்றார் ரஜினிகாந்த்.
சென்னை:
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் அதிசய மனிதர்களை இதிகாசங்களிலும், புராணங்களிலும் படித்திருக்கிறேன்.
நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான்.
நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு.
இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை.
ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம் என தெரிவித்தார்.
- தமிழ்நாடு அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
- சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
சென்னை:
இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இளையராஜா கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமல்ல, நம் அனைவருக்கும் சொந்தமானவர். அதனால் தான் அவருக்கு நாம் பாராட்டு
விழா நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இளையராஜாவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு அவரது சிலையையே நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார்.
- வங்க தேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
- இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய கேப்டன் லிட்டன் தாஸ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்க தேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷமிம் ஹொசைன் மற்றும் ஜாக்கர் அலி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஷமிம் ஹொசைன் (42) ஜாக்கர் அலி (41) ரன்கள் எடுத்தனர்.
இதனால் வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
- சரீரம் படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- இளையராஜாவின் பாடல் இல்லாமல் இளமையில் துள்ளல் இல்ல.
- நம் அத்தனை பேருக்கும் காதல் இல்ல.
இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபறெ்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நாம் எல்லோரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கிற இசைத்தாய் தான் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல் இல்லாம எந்தக் குழந்தைக்கும் தாலாட்டு இல்ல, இளமையில் துள்ளல் இல்ல, யாருக்கும் காதல் இல்ல.
வயல்வெளி, டீக்கடை, திருமணம், ஆட்டோ, பேருந்து இப்படி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் ஒரு இசைஞானி நமது இளையராஜா. இசையமைப்பாளர் என்பதை தாண்டி அவர் ஒரு இசை மருத்துவராகவும் இருக்கிறார். இசையமைப்பாளர் என்பதைகாட்டில் இசை மருத்துவராக பெஸ்ட் ஸ்ட்ரெஸ் ரிலீஃபர்,
சிறுவயதில் நானும் கோடிக்கணக்கான மக்களை போன்று இசைஞானியின் இசையோடுதான் சேர்ந்து வளர்ந்தேன். எந்தவொரு நேரத்திலும் என்னுடைய பிளேலிஸ்டில் இசைஞானி பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இசைஞானி இளையரஜா என டைட்டில் கார்டு மூலம் பல வெற்றி படங்களை தந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. சுறுசுறுப்பாக, ஒழுக்கமாக, கிரியேட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு அனைவருக்குமான எடுத்துக்காட்டாக இருப்பவர் இளையராஜா.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
- உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநாட்டில் நான் உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.
நம்மை மேலயும், கீழயும் மோசமாக ஆட்சி செய்து வருகிற பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
பாஜக அரசுதான் நமக்கு துரோகம் செய்கிறார்கள் என்றால், திமுக அரசும் நம்மை நம்ப வைத்து துரோகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட நான், நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இவங்க நல்லது செய்வாங்கள் என்று தேர்ந்தெடுத்தோம். ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில், எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.
ஆனால், எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம் கதை விடுகிறீர்களே மை டியர் சிஎம் சார்.
உங்களுக்கு தான் ஆசையா பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டிங்கதே.
ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற-னு நீங்களே சொல்லிட்டு, இப்போ நீங்க சொல்றது எல்லாமே ரீல்ஸ் தான். அதுல எல்லாமே பாதியில அறுந்தும் போய்டுச்சு.
இவ்வாறு அவர் கூறினார்.
=======================================
- பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
- தேர்தலில் தில்லு முல்லு செய்ய மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று இரவு அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசு மக்களை கொடுமை படுத்துவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜீரோ போட்ட முகவரியில் வசிப்பதாக வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
2029-ல் பாஜக-வின் ஆட்சிய முடியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஒரு நேரத்தில் தேர்தலை நடத்த திட்ம். அப்போதுதானே ஒரே நேரத்தில் தில்லு முல்லு வேலைகளை எளிதாக செய்ய முடியும். இதற்கு பெயர் ஜனநாயக படுகொலை.
பாரளுமன்ற தொகுதி வரையறை மூலம் தென்மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கு அதிக எம்.பி. தொகுதி கிடைக்கும் வகையில் மோசடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் தவெக முதலில் எதிர்த்தது. எதிர்க்கிறோம். எதிர்ப்போம். தென்இந்திய மாநிலங்களில் அதிகாரத்தை குறைப்பதற்கான மோசடி வேலைகள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு, Sir. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக செய்யும் துரோகம்.
இவ்வாறு பாஜக அரசு மக்களை கொடுமைப்படுத்துவதாக விஜய் குற்றம்சாட்டினார்.
- நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும்.
- சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
281. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படும். (வாக்குறுதி எண் & 375)
282.ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் & 376)
283.அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, குறைகள் களையப்படும். (வாக்குறுதி எண் & 378)
284.தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல்பணி அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 379)
285. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 380)
286. காவலர்கள் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 385)
287. காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான தண்டனைகள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வகை செய்யப்படும். (வாக்குறுதி எண் & 386)
288.காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தாமதமின்றி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 387)
289.ஊர்க்காவல் படையினரின் பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும். (வாக்குறுதி எண் & 390)
290. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 391)
291.பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு போன்ற நகரங்களில் ஆட்டோ நகர்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 392)
292.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் புதிய புறநகர்கள் உருவாக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். (வாக்குறுதி எண் & 393)
293.சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் முறை இரத்து செய்யப்பட்டு, புதிய குழாய்கள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 394)
294.அனைத்து கிராமங்களிலும் காலாவதியான குடிநீர்க் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய குழாய்களைப் பதிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 395)
295.சென்னைக்கு குடிநீர் வழங்க நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 396)
296.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 15 நாட்களில் இணைப்பு வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 397)
297.வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாத தவணை முறையில் வாங்கப்பட்ட வீடுகளுக்கு விற்பனைத் தொகை முழுவதையும் செலுத்திய பிறகும் விற்பனை பத்திரம் வழங்கப்படாதவர்களின் பிரச்சினையை ஆய்வு செய்து, கிரையப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 399)
298.தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படும். புதிய சமத்துவபுரங்களும் கட்டப்படும். (வாக்குறுதி எண் & 400)
299.இந்திரா நினைவு வீட்டுவசதித் திட்டம், குடிசை மாற்று வாரிய வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த வீடுகள் சீரமைத்தோ, புதுப்பித்தோ வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 401)
300.பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுமையாக ஆவின் நிறுவனத்திடம் விற்பனை செய்ய வகை செய்யப்படும். பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 403)
- மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
- மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர்.
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் வணக்கம், மன்னிக்கணும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
போருக்கு செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வணங்குவது வழக்கம், ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு உங்களை சந்திக்கிறேன்.
சாதாரணமாக இருந்த விஜயை இந்த உயரத்திற்கு தூக்கிக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
மரியாதையாக பேசியதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டுவிட்டனர். வாழ்க வசவாளர்கள்.
அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? மக்களின் அன்புக்காக எதையும் செய்வேன்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டான்சித் ஹசன், பர்வேஸ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.
- டோஹித் ஹிரிடோய் 8 ரன்களும் மஹேதி ஹசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் 5 பந்துகளை டாட் செய்த டான்சித் ஹசன் (0) 6-வது பந்தில் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் பர்வேஸ் (0) 3 பந்துகளை டாட் செய்து 4-வது பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.
பவர் பிளேயில் வங்கதேசம் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் வங்கதேசம் அணி 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.






