என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை 2025: இலங்கைக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்
    X

    ஆசிய கோப்பை 2025: இலங்கைக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்

    • வங்க தேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
    • இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    இதில் அபுதாபியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக டான்சித் ஹசன் தமீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த டோஹித் ஹிரிடோய் (8) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மஹேதி ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய கேப்டன் லிட்டன் தாஸ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்க தேச அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஷமிம் ஹொசைன் மற்றும் ஜாக்கர் அலி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஷமிம் ஹொசைன் (42) ஜாக்கர் அலி (41) ரன்கள் எடுத்தனர்.

    இதனால் வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×