என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இப்ப கூட இளையராஜாவின் பழைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
    • நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்றார் ரஜினிகாந்த்.

    திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய இளையராஜா, "சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா கிராப் முடி விட்டுட்டு கையில பட்டையா ஒரு வாட்ச் கட்டிக்கிட்டு... என்று கூறிய இளையராஜா ரஜினிகாந்திடம் சொல்லவா சொல்லவா... என்று கூறி மகேந்திரனும் நீங்களும் நானும் உக்காந்து குடிச்சோம்.

    ஸ்டூடியோவில் வந்து என்னிடம் ரஜினி சொல்றாரு... நாம குடிச்சோம் நியாபமிருக்கா... நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே... அதை சொல்ல போறேன் என்றார். நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்லை என்றேன்" என்று இளையராஜா தெரிவித்தார்.

    இதைகேட்டு இருக்கையில் இருந்து எழுந்து இளையராஜா அருகில் வந்து பேசிய ரஜினி, "ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம், அப்போது இளையராஜாவிடம் குடிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஓகே சொல்ல... அப்போது அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு அவரு போட்ட ஆட்டம் இருக்கே... 3 மணி நைட் வரைக்கும்... ஊருல இருக்க கிசுகிசு எல்லாம் கேக்குறாரு... குறிப்பா கதாநாயகிகளை பத்தி... அண்ணே பெரிய காதலன்...அதான் இந்த பாட்டெல்லாம்... அப்படி இருந்தவரு... இன்னும் நிறைய இருக்கு... அடுத்தவாட்டி வைச்சிக்கிறேன்" என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ரஜினி பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    இதனையடுத்து பேசிய இளையராஜா, "இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு" என்று கிண்டலடித்தார்.

    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
    • ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-29 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி காலை 9.15 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.17 மணி வரை

    பிறகு மிருகசீரிஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். மத்யாஷ்டமி மகாவியதீ பாதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-லாபம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- களிப்பு

    மகரம்-பக்தி

    கும்பம்-நம்பிக்கை

    மீனம்-துணிவு

    • நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது
    • மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    குறிப்பாக, சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடசென்னையின் பல பகுதியில் கனமழை பெய்தது.

    இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

    வட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை. மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

    சுவாரஸ்யமாக, நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது" என்று குறிப்பிட்டுள்ளார். 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கி சேமிப்பு உயரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாகச் செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பிறர் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    மிதுனம்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    கடகம்

    வருமானம் உயரும் நாள். வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    சிம்மம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

    கன்னி

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும், அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    துலாம்

    நிம்மதி கிடைக்க நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். எந்தச் செயலையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது.

    விருச்சிகம்

    அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தமடையும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மதியத்திற்கு மேல் மனஅமைதி கூடும்.

    மகரம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது உத்தமம். எதிர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.

    மீனம்

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும்.

    • பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

    தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

    இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.

    இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

    • ஜப்பானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர்.

    டோக்கியோ:

    உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    1963-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு தொடங்கியது. அப்போது 100 வயதானவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

    இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத்தொகை மற்றும் வெள்ளிக்கோப்பை ஆகியவை முதியோர் தினமான நாளை வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டகாமரோ புகோகா கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதற்கு மாற்றாக மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஜப்பானிய மக்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நடைபயிற்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் மற்ற நாடுகளை விட ஜப்பானிய முதியவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்றார்.

    • முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 194 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சாமர்செட் அணி 19 ஓவரில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

    இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் ஹாம்ப்ஷையர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சாமர்செட் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் டோபி ஆல்பர்ட் அரை சதமடித்து 85 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜே.வின்ஸ் 52 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சாமர்செட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வில் ஸ்மீட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன் குவித்தார்.

    இறுதியில், 19 ஓவரில் சாமர்செட் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது வில் ஸ்மீடுக்கு வழங்கப்பட்டது.

    • மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வெப்ப காற்று பலூனில் சென்றார்.
    • இந்த பலூனில் திடீரென தீப்பிடித்தது. இதில் நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் சுற்றுலா தலமான காந்திசாகருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் சென்றுள்ளார். மாண்ட்சோர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் அவர் பறக்க விரும்பினார்.

    இதற்காக மோகன் யாதவ் பலூனில் ஏறினார். அடுத்த சில நிமிடங்களில் பலூன் தயாராக இருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.

    பலத்த காற்றினால் பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. இதையடுத்து, சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள் முதல்மந்திரி மோகன் யாதவை காப்பாற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்நிலையில், முதல் மந்திரி மோகன் யாதவ் கூறுகையில், சுற்றுலா பயணிகளை கவர இங்கு பல அம்சங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக இந்தப் பகுதி உள்ளது என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து காங்கிரஸ் கட்சி ஏஐ வீடியோ வெளியிட்டது.
    • இதன்மூலம் அவதூறு பரப்பியதாக பீகார் காங்கிரஸ் ஐடி பிரிவு மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில காங்கிரசார் கடந்த 10-ம் தேதி தங்களது எக்ஸ் வலைதளத்தில் 36 வினாடி ஓடும் ஒரு வீடியோவை பகிர்ந்தது. ஏ.ஐ. வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அமைந்துள்ளது.

    இந்த வீடியோ பிரதமர் மோடியின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

    ஆனால், இந்த வீடியோவில் யாருக்கும் அவமரியாதை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்திருந்தது.

    இந்நிலையில், டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ.க. டெல்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா, காங்கிரஸ் கட்சி மீது புகார் ஒன்றை அளித்தார்.

    அந்தப் புகாரில், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயின் கண்ணியத்தைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

    புகாரின்பேரில், பெண்களின் கண்ணியத்தை சீர்குலைத்ததாகக் கூறி, 18(2), 336(3), 336(4), 340(2), 352, 356(2) மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே, பீகாரில் நடந்து வரும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான யாத்திரையின்போது, பிரதமர் மோடி, அவரது இறந்த தாயாரை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் அவதூறு பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.
    • எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான் என்றார் இளையராஜா.

    சென்னை:

    திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது. இதில் இளையாராஜா பேசியதாவது:

    இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்தியது தமிழக அரசுதான். இசை உலக சரித்திரத்தில் இது மிகப்பெரிய விஷயம்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன். எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தது கருணாநிதிதான்.

    சிம்பொனி இசைக்கச் செல்வதற்கு முன்பு வீட்டுக்கே வந்து பாராட்டியவர் முதலமைச்சர். எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை.

    நான் முதலாவது நன்றி தெரிவிக்க வேண்டியது எனது குழந்தைகளுக்குதான். எனது குழந்தைகளுக்காக நான் நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகளுக்காக செலவிடும் நேரம்தான் சிம்பொனியாக வந்துள்ளது.

    சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேகர் அலி 41ரன்னும், ஷமிம் ஹொசைன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி அணி ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கமில் மிஷாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

    • இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
    • நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்றார் ரஜினிகாந்த்.

    சென்னை:

    திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

    'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

    நான் அதிசய மனிதர்களை இதிகாசங்களிலும், புராணங்களிலும் படித்திருக்கிறேன்.

    நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான்.

    நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு.

    இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.

    எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை.

    ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம் என தெரிவித்தார்.

    ×