முதல் மந்திரி சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வெப்ப காற்று பலூனில் சென்றார்.இந்த பலூனில் திடீரென தீப்பிடித்தது. இதில் நல்வாய்ப்பாக அவர் உயிர்தப்பினார்.
முதல் மந்திரி சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ
Published on

போபால்:

மத்திய பிரதேசத்தின் சுற்றுலா தலமான காந்திசாகருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் சென்றுள்ளார். மாண்ட்சோர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வெப்ப காற்று பலூன் ஒன்றில் அவர் பறக்க விரும்பினார்.

இதற்காக மோகன் யாதவ் பலூனில் ஏறினார். அடுத்த சில நிமிடங்களில் பலூன் தயாராக இருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.

பலத்த காற்றினால் பலூன் மேலே எழும்ப முடியாமல் தடுமாறியது. இதையடுத்து, சமயோசிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள் முதல்மந்திரி மோகன் யாதவை காப்பாற்றினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், முதல் மந்திரி மோகன் யாதவ் கூறுகையில், சுற்றுலா பயணிகளை கவர இங்கு பல அம்சங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையமாக இந்தப் பகுதி உள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com