என் மலர்
விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா நாளை மோதல்
- சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் ஆட்டம் டிரா ஆனது
- தென் கொரியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் சீனா 1- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஹாங்சோவ்:
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் தகுதி பெற்றன.
சூப்பர்4 சுற்றில் இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர்4 சுற்றின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.
இதனையடுத்து நடந்த சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் சீனா - தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த சீனா மற்றும் இந்தியா மோதவுள்ளது.






