என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.
இது குறித்து அந்த சிறுமியின் தாய் கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் செய்தார்.
அதில், எனது கணவர் பாலியல் தொல்லை செய்ததால் என் மகள் கர்ப்பமடைந்துள்ளார் என்று கூறினார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமியை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்த்தனர். அங்கு அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து குழந்தை பெற்ற சிறுமியிடமும், அவரது தாயிடமும் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார்.
அப்போது சிறுமியை கர்ப்பமாக்கியது எனது கணவர் அல்ல. வேறு யாரோ அவளை கர்ப்பிணியாக்கி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரியிடம் சிறுமியின் தாய் மாற்றி கூறினார். இதை கேட்ட அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் குழந்தை பெற்ற சிறுமியை விடுதியுடன் கூடிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று அதிகாரி விசாரித்து வருகிறார்.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழக்கொல்லையில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு மதுபிரியர்களின் கூட்டம் அதிகளவில் வரத்தொடங்கின.
அவர்கள் மதுவாங்கி குடித்து போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதில் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
தகவல் அறிந்த கலால் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் பீர்பாஷா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசிவி மற்றும் போலீசார், கலால் வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால், இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து, சிதம்பரம் தாசில்தார் மகேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
எழுத்துப்பூர்வமாக எழுதிய கடிதத்தை தாசில்தார் பொதுமக்களிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை போலீசார் நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் வந்த 2 வாலிபர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன.
இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தங்க நகைகளை கொண்டு வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பெங்களூருவில் நகைப்பட்டறை வைத்து இருப்பதாகவும், அங்கு வடிவமைக்கப்படும் புதிய நகைகளை கடைகளில் காண்பித்து விற்பனை செய்வதற்காகவும், புதுவையில் இருந்து நகைகளை எடுத்து வந்ததாகவும் கூறினர். அதற்குரிய ஆவணங்களையும் போலீசாரிடம் காண்பித்தனர். அந்த வாலிபர்கள் கூறிய தகவல்கள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து நகைகளை பாதுகாப்புடன் எடுத்து வருமாறு கூறி, அவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
நாளை ( 22-ந்தேதி) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 23-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. 24-ந் தேதி வெள்ளி பூதவாகனத்திலும், 25-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 26-ந் தேதி வெள்ளியானை வாகனத்திலும், 27-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. 28-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடக்கிறது.
முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது.

30-ந் தேதி (வெள்ளிக் கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நட பெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நடைபெறுகிறது.
ஜூலை 1-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாலை 5 மணிக்கு திடீரென மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடம் நீடித்தது. அதன்பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது.
இதேபோல் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் பகுதியில் கருப்பசாமிகோவில் உள்ளது. இந்த கோவிலை சேத்தியாத்தோப்பை சேர்ந்த பூசாரி ஆறுமுகம் (வயது 35) நிர்வகித்து வருகிறார்.
இவர் வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்னமி ஆகிய நாட்களில் குறிசொல்லி வருகிறார். குறிகேட்பதற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்துசெல்வர். அவர்கள் தங்குவதற்காக கோவில் அருகே கொட்டகை அமைத்துள்ளார். குறிபார்க்க வருபவர்கள் அந்த கொட்டகையில் தங்குவர். குறி பார்த்து முடிந்தவுடன் உடனே புறப்பட்டுவிடுவர்.
இந்த நிலையில் இன்று காலை ஆறுமுகம் கோவிலுக்கு வந்தார். அப்போது கொட்டகையில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். உடனே சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் பிணத்தை பார்வையிட்டனர். அவரது காது, தலையில் ரத்தக்காயம் இருந்தது. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிணமாக கிடந்தது யார்? என விசாரித்தனர். அதில் அவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் குமரவேல் (வயது 28) என்பதும்.
இவர் சேத்தியாத்தோப்பில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தண்ணீர் பாக்கெட் விற்றுவந்ததும் தெரியவந்தது. ஜெயராமன் எப்படி இறந்தார். யாராவது கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
மது ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி இந்தியாவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளையும் மூடச்செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் தேரடி வீதியில் நேற்று இரவு நடைபெற்றது.
விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் இப்போது நடக்கிற ஆட்சியை பற்றி நினைத்தாலே கோபமாக வருகிறது. இந்த ஆட்சி வருவதற்கு ஓட்டுப்போட்ட மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 200 ரூபாயும், 300 ரூபாயும் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் இதுபோன்ற ஆட்சிதான் கிடைக்கும். இந்தியாவில் இதை போல் மோசமான ஆட்சி வேறு எங்கும் நடக்கவில்லை.
தமிழகத்துக்கு என்று தனியான அரசியல் நாகரீகம் உள்ளது. நம்முன்னோர்கள் அதற்கு வழிகாட்டினார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு கோடி ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க்கும் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆட்சி இனியும் நீடிக்கலாமா?. 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நாசப்படுத்தி விட்டார்கள். தமிழக மக்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் தான் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் தருவோம் என்று சொன்னோம். இனியாவது மக்கள் திருந்த வேண்டும். தமிழகத்தில் பெண்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் நினைத்தால் நல்ல ஆட்சி மாற்றத்தை கொடுக்க முடியும்.
திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் விலைவாசி உயர்வும், வேலை இல்லா திண்டாட்டமும் மக்களை வாட்டி வதைக்கிறது. எனவே இனிமேல் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் நம்முடைய போராட்டம் இருக்கும். பா.ம.க. தலைமையில் மக்களுக்கான கூட்டணி அமையும்.
என்.எல்.சி.க்கு எதிராக வருகிற 29-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் இருந்து மணல் கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டு, அங்கிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மண்ணையும், மக்களையும் காக்க பா.ம.க. போராட்டம் நடத்தும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
முன்னதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் நாளுக்கு நாள் பா.ம.க. வளர்ந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அடுத்தது யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது. அடுத்தது பா.ம.க. தான். இதில் சந்தேகமே கிடையாது.
சட்டப்போராட்டம் நடத்தி மதுக்கடைகளை மூடியது பா.ம.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி. அடுத்தது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு பா.ம.க. ஆட்சியில் கொண்டு வரப்படும். அந்தநிலை விரைவில் வர இருக்கிறது.
தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அரசியல் கலாசாரம் மாற்றம் வர வேண்டும். அந்த நிலை வர வேண்டும் எனில் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்.
இப்போது தமிழகத்தில் மிகப்பெரிய மவுனப்புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி, தரமான சுகாதாரம் தருவோம்.
இவ்வாறு டாக்டர் அன்பு மணிராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை செண்பகாநரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். ஆயுள் தண்டனை கைதியான இவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அறையில் சிறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர் செல்போனை மறைத்து வைத்து அதனை பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் நந்திமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிபிரியர்கள் படையெடுக்க தொடங்கினர். இதன் காரணமாக டாஸ்மாக் கடையில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்கு வந்து மதுகுடிப்பவர்கள் போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்தனர். மேலும் அப்பகுதி மக்களுடன் தகராறும் செய்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் செண்டூர் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் மதுகுடித்துவிட்டு வருபவர்கள், அடிக்கடி அப்பகுதி மக்களிடம் தகராறு செய்தனர். இதனால் பொது மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் மயிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). இவரது மனைவி ராணி (45). ராணி அதேப்பகுதியில் கூழ்கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மகேந்திரன் தன் மனைவி என்றும் பாராமல் அசிங்கமாக திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் வயிற்றில் குத்தியுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த ராணி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். ராணி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்கம் 1, 1-ஏ, சுரங்கம்-2 ஆகிய 3 சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இருந்து தினமும் சுமார் 10 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
அவ்வாறு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரிகள் மின்உற்பத்திக்காக நெய்வேலியில் அமைந்துள்ள 3 அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மீதமுள்ள நிலக்கரிகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சுரங்கம் 1-ஏவில் வெட்டி எடுக்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த நிலக்கரி நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவி எரிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் உடனே என்.எல்.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் என்.எல்.சி. ஊழியர்கள் நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேமிப்பு கிடங்கு முழுவதும் பற்றி எரிவதால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இன்று 3-வது நாளாக தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைக்கும் முயற்சியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் உயிர் சேதம் இல்லை.
இருந்தபோதிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சேதமடைந்துள்ளது. விரைவில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால், சேதமதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
என்.எல்.சி. சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் விசாரணை நடத்தாவிட்டால் தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் சுரங்கம் 1, 1-ஏ, சுரங்கம்-2 ஆகிய 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு நெய்வேலியில் அமைந்துள்ள 3 அனல் மின் நிலையங்களுக்கு தனித்தனியாக மின் உற்பத்திக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
எஞ்சியுள்ள கூடுதல் நிலக்கரியை பங்கர் என்று சொல்ல கூடிய நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தனித்தனியாக தினமும் சேமித்து வைக்கப்படும். அனல் மின்நிலையங்களுக்கு அதிகமாக நிலக்கரி தேவைப்படும் போது இந்த பங்கர் பகுதியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக அனுப்பப்படும்.
இந்த நிலையில் சுரங்கம் 1-ஏ சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே நெய்வேலி என்.எல்.சி. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம், பொருட்சேதம் இல்லை.
இது குறித்து நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி கூறும் போது, “சேமிப்பு கிடங்கில் (பங்கர்) அழுத்தம் காரணமாகவும், தட்ப வெப்ப நிலை, உயர் வெப்பம் காரணமாகவும் சில நேரங்களில் தீப்பிடிப்பது இயல்பு. சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கொண்டு அனைத்து முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். வெயில் காலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது சாதாரணமானதுதான்” என்றார்.






