என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர், சிதம்பரத்தில் பலத்த மழை
    X

    கடலூர், சிதம்பரத்தில் பலத்த மழை

    கடலூர், சிதம்பரம் பகுதியில் திடீர் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
    கடலூர்:

    கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாலை 5 மணிக்கு திடீரென மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடம் நீடித்தது. அதன்பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது.

    இதேபோல் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
    Next Story
    ×