search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone seized"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைச்சாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சிறைக்காவலர்கள் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எண்ணூர் தனசேகரன் இருந்த அறையிலிருந்து மீண்டும் சிறைக்காவலர்கள் செல்போன் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவன் உள்பட 2 பேரை மாணவர்களுடன் சேர்ந்து போலீசார் மடக்கி பிடித்தனர்
    • சாரிகாவின் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்து தப்பினர்.

    கோவை:

    நீலகிரி கொலக்கம்பையை சேர்ந்தவர் சாரிகா (வயது 19). இவர் கோவை மதுக்கரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது ேதாழியுடன் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர் திடீரென சாரிகாவின் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்து தப்பினர். இதைகண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தனது கல்லூரி நண்பர்களிடம் கூறினார். அவர்கள் மதுக்கரை ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ரோந்து பணியில் இருந்த மதுக்கரை போலீசார் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து செல்போனை பறித்த வாலிபர்களை துரத்தி சென்றனர். பின்னர் போலீசார் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கிணத்துக்கடவு சொலவம்பாளையத்தை சேர்ந்த பிரவின் ராஜ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சாரிகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின் ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    புழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    மாதவரம்:

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.

    புழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா? யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail
    ×