என் மலர்
செய்திகள்

பெண்ணாடம் - மயிலத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பெண்ணாடம் மற்றும் மயிலத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணாடம்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் நந்திமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிபிரியர்கள் படையெடுக்க தொடங்கினர். இதன் காரணமாக டாஸ்மாக் கடையில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்கு வந்து மதுகுடிப்பவர்கள் போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்தனர். மேலும் அப்பகுதி மக்களுடன் தகராறும் செய்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் செண்டூர் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் மதுகுடித்துவிட்டு வருபவர்கள், அடிக்கடி அப்பகுதி மக்களிடம் தகராறு செய்தனர். இதனால் பொது மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் மயிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story