search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "wine shop"

  • குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங்.
  • போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

  போடிப்பட்டி :

  உடுமலை தளி ரோட்டில் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் லேசான தள்ளாட்டத்துடன் வந்த நபரை தடுத்து நிறுத்தினர்.மேலும் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்வதற்காக 'வாயை ஊது' என்று சொன்னபோது அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  மேலும் அவருடைய மனைவிக்கு போன் செய்து வரவழைத்தார்.அங்கு வந்த அவருடைய மனைவி போலீசாரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். மதுக்கடைகள் திறக்கிறது தப்பில்லேன்னா குடிக்கிறது எப்படி தப்பாகும். அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடித்தார். அரசாங்கம் விற்கும் மதுவைத் தானே வாங்கிக் குடித்தார். இதோ அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடையும் அங்கேயே பாரும் செயல்படுகிறது.

  குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங். அங்கே குடிச்சிட்டு ரோட்டிலே படுக்க முடியுமா? வீட்டுக்கு போய்தானே ஆகணும். அப்போ நீங்க எப்படி பிடிக்கலாம்'என்று போலீசாரிடம் எகிறினார். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமானவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

  அந்த நபருக்கு குடி பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக போலீசார் முயன்றனர். ஆனால் குடிச்சதை நாங்களே ஒத்துக்கும் போது எதுக்கு டெஸ்ட் பண்ணனும். எங்கேயும் வர முடியாது என்று அடம் பிடித்தார். இதனையடுத்து போதை ஆசாமியின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

  அந்த அம்மா நியாயமா தானே கேக்கறாங்க என்று ஒரு தரப்பினரும், போலீசாரின் கையை கட்டிப் போட்டா இது மாதிரி தப்பு பண்ணினவங்களெல்லாம் எகிறத் தான் செய்வாங்க என்று இன்னொரு தரப்பினரும் விமர்சனத்தை முன் வைத்தனர்.

  வள்ளியூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

  வள்ளியூர்:

  ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ஸ்ரீபால், முத்துகுமார் ஜெகதீஷ் ஆகிய போலீசார் வள்ளியூர் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

  அப்போது வள்ளியூர் நோக்கி வந்த  ஒரு காரை தடுத்தி நிறுத்தினர். காரில் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் இருந்தார். காரில் போலீசார் சோதனை செய்தனர்.

  அப்போது அதில்  ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 200 இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இந்த பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை என டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் கூறியதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ராதாபுரம் சட்ட மன்ற தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

  விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt
  சென்னை:

  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளுக்கு அருகேயுள்ள நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல அந்த வழியாக செல்லும் சாலையைத்தான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். வேறு இடத்தில் இயங்கி வந்த மதுபானக்கடையை கடந்த டிசம்பர் மாதம் அதிகாரிகள் விவசாய விளைநிலத்தில் அமைத்துள்ளனர். இதனால், விவசாய பணிகளும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் எத்தனை உள்ளன? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் பார்களிலும் கண்காணிப்பு கேமராக்களை ஏன் பொருத்தக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

  அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தற்போது 110 மதுபானக்கடைகள் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

  இதையடுத்து நீதிபதிகள், “விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை வருகிற 18-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
  ×