என் மலர்
செய்திகள்

வள்ளியூர் அருகே பறக்கும்படை சோதனையில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.64 லட்சம் பறிமுதல்
வள்ளியூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls
வள்ளியூர்:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ஸ்ரீபால், முத்துகுமார் ஜெகதீஷ் ஆகிய போலீசார் வள்ளியூர் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வள்ளியூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தினர். காரில் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் இருந்தார். காரில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 200 இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இந்த பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை என டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் கூறியதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ராதாபுரம் சட்ட மன்ற தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர். #LSPolls
Next Story