என் மலர்
செய்திகள்

மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
குடும்ப பிரச்சினையில் மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). இவரது மனைவி ராணி (45). ராணி அதேப்பகுதியில் கூழ்கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மகேந்திரன் தன் மனைவி என்றும் பாராமல் அசிங்கமாக திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் வயிற்றில் குத்தியுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த ராணி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். ராணி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






