search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பறிமுதல்"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைச்சாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சிறைக்காவலர்கள் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எண்ணூர் தனசேகரன் இருந்த அறையிலிருந்து மீண்டும் சிறைக்காவலர்கள் செல்போன் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    செங்குன்றம்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 27) என்பவரும் கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி இங்கு அடைக்கப்பட்டு உள்ளார்.

    நேற்று இரவு சிறை போலீசார், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதி சரவணன், தனது அறையில் உள்ள கழிப்பறையில் அமர்ந்து கொண்டு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அந்த செல்போனில் அவர் யாருடன் பேசினார்? என விசாரித்து வருகின்றனர்.

    • அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் தங்களது கூட்டாளிகள் மூலம் செய்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தனர்.

    கைதிகள் ஜெயிலில் இருந்தபடியே தங்களது கூட்டாளிகளுக்கு செல்போனில் பேசி எதிராளிகளை தீர்த்துக்கட்டுவது மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து ஜெயிலில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும், அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜெயிலில் கைதிகளின் அறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதனை மீறியும் கைதிகள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஜெயிலில் கைதிகளின் அறைகளில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஜெயில் வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரவீன்குமார் என்பவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது அங்குள்ள கழிவறையில் செல்போன் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    கும்பகோணம் அடுத்த திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இன்று பூந்தமல்லி தனி கிளை சிறை வார்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிஜாம் அலி தங்கி இருந்த அறையில் செல்போன், சார்ஜர், பேட்டரி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • 7-வது பிளாக் பகுதியில் ரோந்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சோதனைகள் செய்யப்படுகிறது.

    ஜெயில் வளாகத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையும் மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று ஜெயிலர் மோகன் குமார் என்பவர் 7-வது பிளாக் பகுதியில் ரோந்து சென்றார்.

    அங்குள்ள கழிவறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு ஒரு செல்போன் பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தனர். அதனை மோகன்குமார் பறிமுதல் செய்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×