search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphones seized"

    மூர்மார்க்கெட் கடைகளில் ஆவணம் இன்றியும் பாதிவிலைக்கு விற்பனை செய்த 794 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் ஏராளமான செல்போன் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு விலை உயர்ந்த புதிய செல்போன்கள், பழைய செல்போன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், உரிய ஆவணங்கள் இன்றியும், பழைய செல்போன்கள் புதிய செல்போன்களாக மாற்றி விற்கப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளில் உரிய ஆவணம், பில் இல்லாமல் செல்போன்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

    அவர்களிடம் இருக்கும் பழை செல்போன்களை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது. என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

    இதைத் தொடர்ந்து 794 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பற்றி கடை உரிமையாளர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொள்ளை கும்பல் தாங்கள் பறிக்கும் செல்போன்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே கடைகளில் திருட்டு செல்போன்கள் வாங்கப்படுகிறதா? அவை எவ்வாறு புதிய செல்போனாக மாற்றப்படுகிறது. என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    புழல் ஜெயிலில் டி.ஐ.ஜி. முருகேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டதில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #PuzhalJail
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகின.

    இதையடுத்து அங்கு நடந்த சோதனையில், நவீன செல்போன்கள், டி.வி.க்கள், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இங்குள்ள கைதிகளுக்கு சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சில போலீசார் புழல் ஜெயிலில் இருந்து மாற்றப்பட்டனர். சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் புழல் ஜெயிலில் டி.ஐ.ஜி. முருகேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். திடீரென சோதனை நடந்தது.

    அப்போது ஆயுள் தண்டனை கைதிகள் முருகன், சந்திரன் ஆகியோரிடம் போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் செல்போன்கள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், அதற்கான சிம்கார்டு, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்தார்.

    ஆயுள் தண்டனை கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? அதை கொடுப்பது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #PuzhalJail

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம் மத்திய சிறையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறை அதிகாரிகள் டவர் பிளாக்கில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஒரு கைதியிடம் 2 செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த செல்போன் அவருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடையநல்லூர் பகுதியில் விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு போன சம்பவம் குறித்து கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பகுதியில் சமீபகாலமாக விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு போயின. சொக்கம்பட்டி அருகே உள்ள திருவேட்ட நல்லூர் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு வீட்டில் செல்போன் திருட்டு போனது. இதுபற்றி சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் கொள்ளையன் விட்டு சென்ற அவனது செல்போன் சிக்கியது. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சிவராம பேட்டையை சேர்ந்த கைலாசசுந்தரம் (வயது27) என்பவர் தான் செல்போன்கள் திருடியது தெரியவந்தது. திருடிய செல்போன்களை அவர் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கைலாச சுந்தரத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சம்பவத்தன்று சொக்கம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
    புழல் ஜெயிலில் இன்று காலை 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கைதிகள் சர்வ சாதாரணமாக செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள்.

    கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 3 கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    ஜெயில் அறையில் இருந்த கைதிகளை சிறைக்காவலர்கள் கண்காணித்தனர். அப்போது நீலாங்கரையை சேர்ந்த கஞ்சா வழக்கில் கைதான கார்த்திக், வழிப்பறி வழக்கில் கைதான கோயம்பேட்டை சேர்ந்த விஜயகுமார், முத்தையால் பேட்டையை சேர்ந்த கணேஷ்லிங்கம் ஆகியோர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், சிம்கார்டு, சார்ஜர், பேட்டரி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? யாரிடம் பேசினார்கள்? செல்போன் கிடைக்க உதவிய ஜெயில் அதிகாரி யார்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    ×