search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க நகைகள்"

    • கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
    • பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 61).

    இவரும், இவரது மனைவியும் கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தனபால், தனது மனைவியுடன் சேலம் குகை கருங்கல்பட்டியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தனர். மகளை பார்த்துவிட்டு தனபாலும் அவரது மனைவியும் கோவை செல்வதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ்சில் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து செவ்வாய்ப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் வரும் போது தனபாலின் அருகில் இருந்த தம்பதிகள் பையை நகர்த்தி வைப்பது போல் பாசாங்கு செய்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது.

    அதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ்சில் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற தம்பதிகளை தேடி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.
    • வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எம். ராசாம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பாவாயி (57).இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று இரவு 9 மணி அளவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.

    அதை பார்த்த பாவாயி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்து விட்டார். பாவாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பாவாயி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சதீஷ்குமார் (31) என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தியதில் மற்றொரு குற்றவாளியான நாமக்கல் வீசாணம் வீனஸ் காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிபாரதி (24) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சேலத்தில் டெய்லர் வீட்டில் நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி எஸ்தர் (வயது 40).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், கம்மல்கள், மோதிரம், தங்க காசு, ஆகிய 19 கிராம் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×