search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silverware"

    • சதீஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
    • பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை ஜனார்த்தனன் ஆகியோர் இருவேல்பட்டில் வசித்து வருகின்றனர். சதீஷ்குமாரின் தந்தை ஜனார்த்தனன் விபத்தில் சிக்கி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைக் காண வீட்டை பூட்டிவிட்டு சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று மாலை இருவேல்பட்டு கிராமத்திற்கு திரும்பினர்.

    அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடை ந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. திருடுப்போன வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடு போன வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.
    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சீதா நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த யுவராஜ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 600 கிராம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. ஆளில்லா ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
    • 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அடுத்த எஸ்.பி.கே.நகர் இ-பிளாக் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் பிரியதர்ஷினி.

    கண்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். பிரியதர்ஷினி நாமக்கல் மாவட்ட அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றார்.

    இந்த நிலையில் சசிகலா சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனால் கண்ணன் மட்டும் நேற்று காலை புறப்பட்டு பள்ளிக்கு சென்றார். மகள் பிரியதர்ஷினி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்டு திருடர்கள், வீட்டின் கதவை திறந்து வீட்டில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதன் பிறகு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நேற்று மாலை கண்ணன், மகள் அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களை ஆள் இல்லாத நேரத்தில் திருடர்கள் புகுந்து திருடியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×