என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
- தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
- 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அடுத்த எஸ்.பி.கே.நகர் இ-பிளாக் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் பிரியதர்ஷினி.
கண்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். பிரியதர்ஷினி நாமக்கல் மாவட்ட அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றார்.
இந்த நிலையில் சசிகலா சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். இதனால் கண்ணன் மட்டும் நேற்று காலை புறப்பட்டு பள்ளிக்கு சென்றார். மகள் பிரியதர்ஷினி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்டு திருடர்கள், வீட்டின் கதவை திறந்து வீட்டில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதன் பிறகு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நேற்று மாலை கண்ணன், மகள் அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களை ஆள் இல்லாத நேரத்தில் திருடர்கள் புகுந்து திருடியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






