தஞ்சையில் ஓய்வு பெற்ற கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை

வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தஞ்சையில் ஓய்வு பெற்ற கண்டக்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சீதா நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த யுவராஜ் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 600 கிராம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. ஆளில்லா ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com