search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
    • சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தங்க சாலை வீதி மற்றும் சருகு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த குடியிருப்பு பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பு.புளியம்பட்டி பகுதியில் ஒரு பெண் வந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

    இதே போல் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு தங்கசாலை வீதியில் உள்ள வீடுகளிலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் டார்ச் லைட் அடித்து பார்ப்பதாகவும் வந்து பார்த்தால் அவர்கள் ஓடி விடுவதாகவும், மர்ம நபர்கள் பகல் நேரங்களில் நோட்டம் விடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் பெண் முகத்தை முழுவதும் துணியால் மறைத்து மாஸ்க் அணிந்து புடவை கட்டி உள்ளார். இதை பார்த்தால் அவர் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் பெண்களைப் போல் வேடமிட்டு வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் புளியம்பட்டி நகர குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருவது அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.இதனால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவங்களில் நடக்க வாய்ப்புள்ளது.

    எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து பயமின்றி இருக்க புளியம்பட்டி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    மேலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாடி வருவதையும் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை சிசிடிவி கேமராவில் பார்ப்பதற்கு நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெளிச்சம் இல்லாத இடங்களில் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும். பல பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
    • கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    விழாவில் நீலகிரி கலெக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு இருந்தது. வாயிலின் நுழைவு வாயில் பல வண்ணமலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு, விழாவின் சிறப்பு அம்சமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பல்வேறு வகையான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு, ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பாரம்பரியமிக்க ஊட்டி மலைரெயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் 20 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும், பல வண்ண மலர்கள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டு காட்சியளிக்கிறது.

    இதுதவிர பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் 10 நாட்களும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரோஜா பூங்காவில் பல ஆயிரம் வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    இதுமட்டுமின்றி குழந்தைகளை கவரக்கூடிய வகையில், பல ஆயிரம் மலர்களை கொண்டு புறா, வனவிலங்குகளை காக்க வலியுறுத்தி யானைகள், புலி, வரையாடு, காட்டுஎருமை, சிங்கம் உள்பட பல்வேறு வன விலங்குகளின் உருவங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட மலைரெயில், அலங்கார வளைவுகளை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த யானை, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அவர்கள் அதன் அருகில் சென்று அதனை தொட்டு பார்த்தும், அதன் முன்பாக நின்று புகைப்படமும் எடுத்தனர்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் கண்காட்சியை காண பூங்காவுக்கு திரண்டு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    • ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது.
    • பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.

    வரலாறு காணாத வெயிலால் மக்கள் புழுக்கத்தால் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வந்தனர். மழை எப்போது பெய்யும், குளிர்ச்சியான சூழ்நிலை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் 106.72 டிகிரி பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் ஈரோடு புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக கோபி பஸ் நிலையம் அருகே ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதேப்போல் கவுந்தபாடி, நம்பியூர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பவானியில் இரவில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. சித்தோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரவில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. பெருந்துறை, எலந்த குட்டைமேடு, வரட்டுப் பள்ளம், மொடக்குறிச்சி, தாளவாடி போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு புறநகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு சில நிமிடமே மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-53, கவுந்தப்பாடி-39, நம்பியூர்-33, பவானி-29, குண்டேரிப்பள்ளம்-26, கோபி-12.20, பெருந்துறை-8. 20, எலந்த குட்டை மேடு-6.40, வரட்டுப்பள்ளம் அணை-4.40, மொடக்குறிச்சி-4, தாளவாடி-1.50.

    • வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • நீர் மோர் பந்தல்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நீர்மோர் பந்தல்கள் திறக்க உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

    இந்த ஆண்டு 70-வது பிறந்த நாள் காணும் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை வரை சென்னையில் இருந்த அவரை மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து முன் கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் சேலம் புறப்பட்டு சென்றார்.

    வருகிற 12-ந்தேதி பிறந்த நாளன்று அவர் சேலத்தில் இருக்கிறார். வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கோவில்களில் இன்று முதல் சிறப்பு வழிபாடு செய்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    காலை சிற்றுண்டி வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நோட்டு புத்தகம் வழங்குதல், முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களை பாராட்டி கவுரவித்தல், குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குதல், ஏழை, எளியோருக்கு பிரியாணி வழங்குதல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    நீர் மோர் பந்தல்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தாலும் கூடுதலாக பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நீர்மோர் பந்தல்கள் திறக்க உள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை 12-ந்தேதி கோலாகலமாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.க.வினர் இப்போதே தயாராகி விட்டனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
    • செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

    இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காணாமல் போன அவரது 2 செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
    • கிணற்றில் அவரது செல்போன் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிட்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமரணம் வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதனால் தடயங்களை தேடி போலீசார் அலைந்து வருகின்றனர். அவரது உடல் கிடந்த தோட்டத்தில் மேலும் சில தடயங்களை சேகரிக்க தொடர்ந்து நேற்று 4-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் அங்கு ஆய்வு செய்தனர்.

    காணாமல் போன அவரது 2 செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் அவரது செல்போன் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிட்டனர்.

    பின்னர் நேற்று இரவு 2 ராட்சத மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடங்கினர். இன்று காலை வரையிலும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது.

    சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்த 22 அடி தண்ணீரும் இன்று காலையில் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. எனினும் இடுப்பு அளவிற்கு சகதி இருப்பதால் முத்து குளிப்பவர்கள் அல்லது தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றுக்குள் இறங்க செய்து அதில் ஏதேனும் தடயம் சிக்குகிறதா? என்ற சோதனையில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்டு இருப்பதால், அவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு 2 லிட்டர் அளவு கொண்ட பாட்டில் கிடைத்துள்ளது. அதில் பதிவாகியுள்ள கைரேகைகளை நிபுணர்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • 15-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 3 நாட்க ளாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இத னால் ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 106 டிகிரியும் இதர சமவெளி பகுதிகளில் 102 டிகிரியும் வெயில் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 15-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 12 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.
    • 1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.

    1,364 அரசுப்பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:-

    அரசு பள்ளிகளில் 87.90 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதம், பெண்கள் பள்ளியில் 93.80 சதவீதமும்,, ஆண்கள் பள்ளி 83.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாட வாரியாக 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:- தமிழ் 8 பேர், ஆங்கிலம் 415, கணிதம் 20,691, அறிவியல் 5,104, சமூ அறிவியல் 4,428.

    பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:- தமிழ் 96.85 சதவீதம், ஆங்கிலம் 99.15 சதவீதம், கணிதம் 96.75 சதவீதம், அறிவியல் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 95.74 சதவீதம்.

    தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்கள் விவரம்:-

    அரியலூர்- 97.31 சதவீதம்

    சிவகங்கை - 97.00 சதவீதம்

    ராமநாதபுரம்- 96.40 சதவீதம்

    கன்னியாகுமரி- 96.20 சதவீதம்

    திருச்சி- 95.20சதவீதம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி தடை செய்யப்பட்டு உள்ளது.
    • வருகிற 15-ந்தேதி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூன் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை அங்கு பெறுவதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் 24 மணி நேரமும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி தடை செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் வருகிற 15-ந்தேதி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
    • தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

    www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.

    இதனால் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது.

    காலையில் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்று தங்கம் சவரன் 720 ரூபாய் அதிகரித்து ரூ.53,640-க்கும் கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    ×