search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையில் தீ"

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
    • செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

    இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் அரியவகை மரங்கள், செடிகள் கருகின.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அண்மையில் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, சிறுத்தை, புலிகள், சருகுமான்கள், புள்ளி மான்கள், மிளாமான்கள் போன்றவை அதிகளவில் உள்ளன.

    இங்குள்ள பேய் மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மலையில் உள்ள பெரும்பாலான இடங்கள் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகளும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பேய் மலையில் உள்ள மொட்டை என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கியது. இதனால் அங்கிருந்த காய்ந்த மரங்கள் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த மரம், செடி, கொடிகளிலும் தீ பரவ தொடங்கியது.

    இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் உடனே விருதுநகர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு விரைந்து வந்த வனத்துறையினர் தீவிபத்து நடந்த பகுதிக்கு சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்து மலையில் இருந்த அரியவகை மரம், செடி, கொடிகள் கருகின.  

    • மரங்கள் எரிந்து நாசம்
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தன்னார்வ சேவை அமைப்பினர், வனத்துறையினர் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காஞ்சி சாலையில் அமைந்துள்ளது கவுத் திமலை. இரும்பு தாது உள்ள இந்த மலை மற்றும் மலைப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் லட் சக்கணக்கான மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண் டும் கோடை காலத்தில், இந்த மலையில் தீ விபத்து ஏற்படுவதும் மரங்கள் அழிவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், கவுத் திமலையின் தென்மேற்கு திசையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, கிடுகிடுவென பரவியது. அதனால், மலைப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் தீயில் கருகி சாம்பலா னது. பல அடி உயரத் துக்கு தீ பற்றி எரிந்ததால், மலைப்பகுதியில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது.

    இந்த தீயில் சிக்கி, மான்கள், காட்டுப்பன் றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் உயிரிழந்தி ருக்கலாம் என தெரிகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே, கவுத்திமலை யில் காட்டுத் தீப்பற்றியிருப்பது வன ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில், தன்னார்வ சேவை அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஆனாலும் தீயை கட் டுக்குள் கொண்டு வரு வது கடும் சவாலாகவே உள்ளதாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தெரி வித்தனர்.

    மேலும், மலைப்பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோர், புகைப்பிடிக்க பற்ற வைக்கும் நெருப்பால், இது போன்ற விபத்துக்கள் ஏற் படலாம் அல்லது சமூக விரோதிகள் திட்டமிட்டு தீவைத்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    ×