search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதி"

    • திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை செய்ய வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பொதுதொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள திருமுருகன் பூண்டிபகுதியிலுள்ள விவேகானந்தா சேவாலயத்தில் பரிதாபமாக 3பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைஅளிக்கிறது.

    மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்திருப்பூர் பகுதி முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவ -மாணவிகள்தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

    திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and Children (Regulation) Act 2014-ன் கீழ் பதிவு செய்ய தெரிவிக்கப் பட்டுள்ளது.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் (அறை எண் : 35-36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண் : 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23), பதிவு செய்ய அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட பிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பிரிவு 12ன் உட்பிரிவு 1, 2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட பிரிவுகள் 5, 6 மற்றும் 12-ன் கீழ் எந்த விதிகளுக்கும் இணங்க தவறிய எந்த ஒரு நபரும் வழக்கில் தண்டிக்கப்படுவார். முதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம்அபராதமும், இரண்டாவது அல்லது அதை தொடர்ந்து குற்றமாக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் .

    அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and children (Regulation) Act 2014-ன் கீழ் 30.9.2022க்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014 -ன் படி அனைத்து குழந்தைகள் தங்கும் விடுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014- ன் படி பதிவு செய்யாமல் குழந்தைகள் தங்கும் விடுதிகள் இயங்குவது சட்டப்படி குற்றமாகும்

    தென்காசி:

    தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014 -ன் படி அனைத்து குழந்தைகள் தங்கும் விடுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

    தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் சட்டம் 2014- ன் படி பதிவு செய்யாமல் குழந்தைகள் தங்கும் விடுதிகள் இயங்குவது சட்டப்படி குற்றமாகும். எனவே தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள், தங்கும் விடுதிகள் சட்டத்தின்படி பதிவு செய்வதற்கு இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி கருத்துரு வினை தயார் செய்து ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு எண் 14 பெருமாள் கோவில் தெரு, தென்காசி 627811 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
    • 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு தொடக்கி வைத்தார்.
    • விழாவின் முடிவில் விடுதியின் பின்புறம் தென்னங்கன்றுகள் நடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேலூர் ஊராட்சி தண்டலச்சேரி அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கொடிமேடை அமைத்து, தேசிய கொடியேற்றி,தென்னை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெ.சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.மாணவியர் விடுதி காப்பாளினி வ.ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இந்து சமய அறநிலையத்துறை பணி நிறைவு தை.ஜெயபால், முன்னிலையில் வேளூர் கிராம நல விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் தங்கவேல்,செல்லப்பா, நாராயணன்,கல்லூரி பேராசிரியர் நடேச மகரந்தன்,வேளூர் தினேஷ் குமார், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் வேதகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இளம்பரிதி, கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பணிதள மகளிர் பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராம பொதுமக்கள், கல்லூரி மாணவியர்கள், பெற்றோர்கள் விடுதி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதியின் பின்புறம் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • சட்டம், 2014”, பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .
    • வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் மூலம் நடத்தப்படும் விடுதிகள் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம், 2014", பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .அவ்வாறு உரிமம் பெறாது நடத்தும் விடுதிகள் மேற்படி சட்டப்பிரிவு 20-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடுதிகளும் உரிமம் பெற்று நடத்திட விடுதி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , மாவட்ட ஆட்சியர் வளாகம், தளம்-6, அறை எண் : 627, பல்லடம் ரோடு , திருப்பூர். தொலைபேசி : 0421 - 2971198, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்)கைபேசி எண் : 6382614880.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • காரைக்கால் அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் கொள்ளையடிக்கப்பட்டது.
    • 3 மின் விசிறிகள், காப்பர் ஒயர்கள், மரபலகைகள் மற்றும் செப்புப் பட்டைகள் திருடு போனது தெரிய வந்தது.

    காரைக்கால்:

    காரைக்காலை அருகே செருமாவிளங்கை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உபயோகப்படுத்தாத விடுதி கட்டி டங்கள் பூட்டிக் கிடக்கின்றன. கட்டிடத்தை பழுது நீக்கும் எண்ணத்தில், கல்லூரி நிர்வாகம் அவ்வப்போது விடுதி பூட்டைத் திறந்து, துப்புரவு பணியை மேற்கொண்டுவந்தது. வழக்கம் போல் துப்புரவு பணி மேற்கொள்ள விடுதிக்குள் ஊழியர்கள் சென்றபோது, விடுதி பூட்டு உடைந்திருப்பது கண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் குமார் விடுதியில் ஆய்வு நடத்தியபோது, விடுதியிலிருந்து 3 மின் விசிறிகள், காப்பர் ஒயர்கள், மரபலகைகள் மற்றும் செப்புப் பட்டைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, அவர் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி விடுதியில் காப்பர் மற்றும் மின்விசிறையை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014ன்படி அமைந்துள்ள கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்புமற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை நடத்துவதற்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் (அறைஎண் : 35, 36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண்: 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23) சம்பந்தபப்பட்டவர்கள் அணுகி பதிவு செய்ய செய்து கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி,URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்டபிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி, கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும். மேலும் பிரிவு 12 ன் உட்பிரிவு 1,2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதில் ஆண்களுக்கு 19 காலிப்பணியிடங்களும் , பெண்களுக்கு 17 காலிப்பணியிடங்களும் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் ரூ.3 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 36 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதில் ஆண்களுக்கு 19 காலிப்பணியிடங்களும் , பெண்களுக்கு 17 காலிப்பணியிடங்களும் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பு 1-7-22 தேதியில் எஸ்.சி/ எஸ்.டி -18 முதல் 35, பி.சி, எம்.பி.சி, பி.சி.எம், டி.என்.சி -18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    மேற்படி தகுதிகளுடன் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் அடுத்த மாதம் 14-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    காலதாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி, கல்லூரி விடுதிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பள்ளி விடுதிக்கு வருகிற 20-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிக்கு வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையிலும் https://tnadw.hms.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த விண்ணப்பங்கள் தேர்வு குழுவினரால் பள்ளி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு வருகிற 21-ந் தேதி மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்களும், கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி அன்றும் தேர்வு செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.
    • பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற்ப டுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர், கள்ளர் சீர்மரபினர், சிறுபான் மையினர் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் -1, மாணவியர்களுக்கான பள்ளி விடுதிகள்-3, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள்-1 மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிகள்-5 என மொத்தம் 10 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மானவர் மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட் டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர், பிற்பட்ட வகுப்பினர், சிறு பான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

    10ம் வகுப்பு மற்றும்12ம் வகுப்பு பயிலும் மாண வர் மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

    பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத் தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும் இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியு டைய மாணவ மாணவி யர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப் பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட் சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலகத்தி லிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலகத்தில் 30.06.2022 க்குள்ளும் கல்லூரி விடு திகளை பொறுத்தவரை 31.07.2022க்குள்ளும். சமர்ப்பிக்கவேண்டும். மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற் றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான் றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் போது இச்சான்றிதழ்களை அளிக்கலாம்.

    ஒவ்வொரு விடுதியி லும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்கலாம்.

    எனவே மாணவ மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுதி இன்று திறக்கப்படவுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கென்று தனி விடுதி சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை இன்று நடக்கும் விழாவில் சபாநாயகர் ப.தனபால் திறந்து வைக்கிறார்.

    இந்த விழா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் இன்று (27-ந்தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய விடுதிக்கு 30.11.12 அன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்போதைய கவர்னர் ரோசய்யா ஆகியோர் முன்னிலையில் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். தமிழக சட்டசபையில் நடந்த வைர விழாவின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

    10 மாடி கொண்ட இந்த புதிய விடுதி ரூ.33.63 கோடி செலவில், 76 ஆயிரத்து 821 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 68 அறைகள் உள்ளன. ஒரு அறையின் அளவு 593 சதுர அடி.

    தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 60 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதமொன்றுக்கு 5 நாட்கள் வரை அவர்கள் இந்த விடுதி அறையில் தங்கிக்கொள்ளலாம். வெளிமாநில சட்டசபை குழுக்களைச் சேர்ந்தவர்கள், இங்கு வரும்போது மீதமுள்ள 8 அறைகளில் தங்கிக்கொள்ளலாம்.

    விடுதி அறையில் தங்குவதற்கு நாளொன்றுக்கு ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். விடுதி அறையை ஆன்லைன் மூலமாகத்தான் முன்பதிவு செய்ய முடியும். சட்டசபை இணையதளத்தில் இதற்கென்று புதிய வசதி தொடங்கப்படுகிறது.

    அந்த விடுதியில் அறை இருக்கிறதா?, யார்-யார் எத்தனை நாட்கள்?, எந்தெந்த அறையில் தங்கி இருக்கின்றனர்? என்ற விவரங்களையும் இணையதளத்தில் பார்க்கலாம்.

    இந்த புதிய விடுதியின் 10-வது மாடியில் மாநாட்டுக் கூடம் அமைந்துள்ளது. 250 பேர் பங்கேற்கும் வகையிலான அரங்கம் அதுவாகும். சட்டசபை செயலகம்தான் இந்த கட்டிடத்தை நிர்வகிக்க உள்ளது.
    ×