search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non-registration"

    • குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014ன்படி அமைந்துள்ள கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்புமற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை நடத்துவதற்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் (அறைஎண் : 35, 36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண்: 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23) சம்பந்தபப்பட்டவர்கள் அணுகி பதிவு செய்ய செய்து கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி,URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்டபிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி, கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும். மேலும் பிரிவு 12 ன் உட்பிரிவு 1,2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×