என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்னங்கன்று நடப்பட்டது.
மரக்கன்று நடும் விழா
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு தொடக்கி வைத்தார்.
- விழாவின் முடிவில் விடுதியின் பின்புறம் தென்னங்கன்றுகள் நடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேலூர் ஊராட்சி தண்டலச்சேரி அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கொடிமேடை அமைத்து, தேசிய கொடியேற்றி,தென்னை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெ.சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.மாணவியர் விடுதி காப்பாளினி வ.ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை பணி நிறைவு தை.ஜெயபால், முன்னிலையில் வேளூர் கிராம நல விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் தங்கவேல்,செல்லப்பா, நாராயணன்,கல்லூரி பேராசிரியர் நடேச மகரந்தன்,வேளூர் தினேஷ் குமார், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் வேதகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இளம்பரிதி, கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பணிதள மகளிர் பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராம பொதுமக்கள், கல்லூரி மாணவியர்கள், பெற்றோர்கள் விடுதி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதியின் பின்புறம் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.






