search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Labor Welfare Organization's"

    • மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள அலுவலா்கள் மக்களை அலைக்கழிக்கின்றனா்.
    • மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

    அவிநாசி :

    அவிநாசியில் நடைபெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவாக இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில், அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள அலுவலா்கள், இல்லாத சட்டங்களைக் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனா். மேலும் பாரபட்சமின்றி மின்சார வாரிய விதிகளை கடைப்பிடித்து புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    குறிப்பாக ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் மின் மீட்டா்கள் இருப்பு குறித்த விவரங்களை பொது மக்கள் அறியும் வகையில் குறிப்பிட்டு, புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவாக மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

    • திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை செய்ய வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பொதுதொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள திருமுருகன் பூண்டிபகுதியிலுள்ள விவேகானந்தா சேவாலயத்தில் பரிதாபமாக 3பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைஅளிக்கிறது.

    மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்திருப்பூர் பகுதி முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவ -மாணவிகள்தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

    திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×