search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை"

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டம்
    • நாகர். அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து பல்வேறு அரசு பஸ்களில் கரும்பு வாழைக்குலைகள் கட்டப் பட்டு இருந்தது. இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சென்ற அரசு பஸ் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைக்குலைகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் அகற்றியதாக தெரிகிறது.

    இந்த தகவல் அறிந்ததும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்தனர். ெதாடர்ந்து எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரி கள், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பஸ்சில் இருந்து அகற்றப்பட்ட வாழைக்குலைகள், கரும்பு கள் மீண்டும் கட்டப்படும் என்று உறுதி அளித்தனர்.தொடர்ந்து பஸ்களில் வாழைக்குலைகள், கரும்பு கள் கட்டப்பட்டது. இத னால் பாரதிய ஜனதா வினர் போராட் டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கவுன்சிலர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    மாரி செல்வராஜ்

    இதையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


    வாழை படப்பிடிப்பு

    இந்நிலையில், 'வாழை' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்துஉள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.


    வாழை படப்பிடிப்பு

    'வாழை' திரைப்படம் மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில் இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி வாழை திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    வாழை

    வாழை

    இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது.
    • பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டி ருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம்

    செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.

    அதேபோல் இரு சக்கர வாகனங்களில் சாலையில் செல்பவர்களும், நடந்து சென்றகூலி தொழி லாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். கடைகளுக்கு செல்லும் சிலர் குடைகளைப் பிடித்துக் கொண்டு சென்றனர் . கார்கள், வேர்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் சாலையில் செல்லும்போது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.

    விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வாழை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வகை யான பண பயிர்கள் சாகு படி செய்துள்ளனர். வாழை தோட்டங்களில் மழை வெள்ளம் சூழுந்து குளம்போல் காணப்ப டுகிறது. இதனால் வாழை அழுகும் சூழ்நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • தொடர் மழையால் நீரில் மூழ்கி வாழை, நெற்பயிர்கள் சேதமானது.
    • விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காயாம்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த வருடங்களில் பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்வதால் மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செம்மிணிபட்டி கிராமத்திற்கு உட்பட்ட கருப்பாச்சி கண்மாய் துார் வாரததால் சுமார் 25 ஏக்கருக்கு மேல் பட்டா இடத்தில் நீர்பிடிப்புக்கு உள்ளாகிறது.

    அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெல் நடவு செய்தனர். தற்போது சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வாழை பயிரிட்ட நிலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. இதனால் சுமார் 25 ஏக்கர் வாழை, நெற் பயிர்கள் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    இதனால் வருடம் தோறும் பெருத்த நஷ்டத்தை இந்த பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயி ராமநாதன் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், மதுரை- சிவகங்கை என இரு மாவட்ட அதிகாரிகளும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற முடியாமல் தட்டிக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.

    • வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.
    • தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தகவல்

    நாகர்கோவில்:

    தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் சாகு படி செய்யப்பட்டுள்ள முக் கிய பயிர்களான வாழை மற் றும் மரவள்ளி போன்ற பயிர் களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 5,063 ஹெக்டர் பரப் பளவில் வாழை மற்றும் 1,437 ஹெக்டர் பரப்பளவில் மர வள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை. மழைபொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்டநிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை மற்றும் புயல் ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங் கப்படுகிறது. குத்தகை விவசா யிகளுக்கும் இத் திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெறலாம். வாழை விவசாயி கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ.83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1,420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடாகவும் பெறலாம்.

    கடன் பெறும் விவசாயிக ளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங் கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப் பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறா விவசாயிகள் தங்களது அரு காமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மற் றும் பொது சேவை மையங் கள் மூலம் பிரீமியம் செலுத்த லாம். இதற்கு தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விவரம் ஆகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயிர் காப் பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரத்து அதிகரிப்பால் வாழை விலை வீழ்ச்சியடைந்துள்ள
    • வேதனையில் விவசாயிகள்

    கரூர்:

    தொடர் மழை காரணமாக, வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவில் விலை இல்லாததால் வாழை விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

    கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயு தம்பாளையம், புகழூர், வாங்கல், திருமுக்கூடலுார், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப் படுகிறது.

    நடப்பாண்டு கடந்த மே 24 முதல் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இது தவிர, அமராவதிஅணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆறுகளிலும் தண்ணீர் வந்ததால் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கரூர் மாவட்டத்தில்பரவலாக மழை பெய்து வந்த தாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை.இந்நிலையில் கடந்த, 25ல் மகாளய அமாவாசை அனுசரிக்கப் பட்டது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள் கரூர் மார்கெட்டுக்கு விற் பனைக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன், 600 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூர வள்ளி 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற பச்சைநாடன் 400 ரூபாய்க்கும் நேற்று ஏலம் போனது.

    இது குறித்து வாழை வியாபாரிகள் கூறியதாவது:

    கடந்தாண்டை விட, நடப்பாண்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு, மாநிலம் முழுவதும் பெய்த மழை தான் காரணம். வரத்து அதிகரிப்பால், விலை எதிர்பார்த்த அளவில் உயர வில்லை. என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
    • வேதனையில் விவசாயிகள்; மகிழ்ச்சியில் பொதுமக்கள்

    கரூர்:

    மகாளய அமாவாசையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சிய டைந்துள்ளது.

    கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயுதம்பா ளையம், புகளூர், வாங்கல், திருமுக்கூடலூர், மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழைத்தார் சாகுபடி நடக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர, அமரா வதி, நொய்யல் ஆறுகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், வாழைத்தார் சாகுபடி அதிகரித்துள்ளது. நாளை மறுநாள் (25-ந் தேதி) மகாளய அமாவாசை அனுசரிக்கப்பட உள்ளது.

    இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, மார்க்கட்டுக்கு கூடுதலாக வாழைத்தார்கள் வரத் தொடங்கியுள்ளன.

    பூவன் பழம் ரூ. 150 முதல் 200 வரையிலும், ரஸ்தாளி ரூ. 200 முதல் 300 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 150 முதல் 250 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன.

    இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், எதிர்பார்த்த அளவில் விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் மிக குறைந்த விலைக்கு பழம் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • கடந்த இரண்டு நாட்களாக 2 பெண் யானைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளது.
    • இந்த யானைகள் இரவு நேரங்களில் மட்டும் அங்குள்ள தோட்டத்து பகுதிகளுக்குச் சென்று, வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை, கன்னிவாடி வனச்சரக பகுதியில் சுமார் 11 யானைகள் உள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களாக 2 பெண் யானைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளது.

    இந்த யானைகள் இரவு நேரங்களில் மட்டும் அங்குள்ள தோட்டத்து பகுதிகளுக்குச் சென்று, வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. பகல் நேரங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் யானைகள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த பகுதியைச் சேர்ந்த நரசிங்கபுரம் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்புக்குள் புகுந்த யானைகள், சுமார் 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. அதேபோல் அவரது தோட்டத்தில் உள்ள வாழை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து, தங்கபாண்டி கன்னிவாடி சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடங்களை பார்வையிட்டனர். அங்கு யானைகளின் கால் தடங்களை வைத்து யானை வந்து சேதப்படுத்தியதை உறுதிப்படுத்தினர். மேலும், அந்தப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள யானையின் சத்தத்தை வைத்து அது இரண்டு பெண் யானை எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இதையடுத்து, இரவு நேரங்களில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் உள்ள யானைகளை மேற்கு தொடர்ச்சி மலைக்கு விரட்டிவிடும் நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட உள்ளனர். இரண்டு யானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் பீதியில் உள்ளனர்.

    • வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் நிரம்பி வழியும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அந்தியூர் பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டி–ருக்கிறது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 3 ஆயிரம் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    விவசாயிகளின் கோரி–க்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அணை–யில் இருந்து ஆண்டு தோறும் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இதில் வாய்க்கால் பாசன த்திற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்ற வருகின்றனர். வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்கள், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் அப்பகுதியில் உள்ளோர், விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரட்டுப்ப–ள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.

    எச்சரிக்கை

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்க–ளுக்கு, சாகுபடி செய்யக்கூ–டாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. ஏற்கனவே சாகுபடி செய்திருந்தவர்கள் அறுவடை செய்த பின்பு, மீண்டும் சாகுபடி செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வட்டக்காடு பகுதியில் உள்ள முதல் வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரி–க்கையும் மீறி அப்பகுதியில் உள்ள நபர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

    வட்டக்காடு பகுதியில் உள்ள வாய்க்கால்களின் இரண்டு புறங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள், தொடர்ந்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்ப–டுத்தாமல் வாழை, சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் எல்லைக்கல் நட்டதற்குப் பிறகும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இல்லையேல், வாய்க்கால் புறம்போக்கு பகுதியை பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக வாடகை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

    அவிநாசி,

    திருப்பூர், கோவை மாவட்டத்துக்கு உட்பட்டு அவிநாசி, சேவூர், அன்னூர், சிறுமுகை, சத்தியமங்கலம் உட்பட பல இடங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. மும்பை உள்ளிட்ட இடங்களுக்கும் நேந்திரன் வாழை அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த3 ஆண்டாக கொரோனா பாதிப்பால் நேந்திரன் வாழை வர்த்தகம் பாதித்தது. ஆனால் இந்தாண்டு, கிராக்கி அதிகரித்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கிலோ 60 ரூபாய்க்கு நேந்திரன் வாழை கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்தாண்டு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றனர்.

    ×