என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.விடம் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
பஸ்சில் கட்டப்பட்ட வாழை-கரும்புகள் அகற்றம்
- எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டம்
- நாகர். அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து பல்வேறு அரசு பஸ்களில் கரும்பு வாழைக்குலைகள் கட்டப் பட்டு இருந்தது. இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சென்ற அரசு பஸ் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைக்குலைகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் அகற்றியதாக தெரிகிறது.
இந்த தகவல் அறிந்ததும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்தனர். ெதாடர்ந்து எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரி கள், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பஸ்சில் இருந்து அகற்றப்பட்ட வாழைக்குலைகள், கரும்பு கள் மீண்டும் கட்டப்படும் என்று உறுதி அளித்தனர்.தொடர்ந்து பஸ்களில் வாழைக்குலைகள், கரும்பு கள் கட்டப்பட்டது. இத னால் பாரதிய ஜனதா வினர் போராட் டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கவுன்சிலர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






